காதல் கருத்தரிப்பு

Posted by G J Thamilselvi On Saturday, 16 February 2013 0 comments

விழிகள் காதல் நதியில்
மூழ்கி திளைகிறது
நீரூற்றுகளின் வெம்மையில்
கொந்தளிக்கிறது

ஆழ்ந்து அமிழும்
ஒவ்வொரு நிகழ்விலும்
உச்சங்கள் மிச்சங்கள்
இல்லாமல்

குளிர் தீண்டல்
ஒவ்வொன்றிலும்
துடித்து துயில்கிறது
பெண்மை

உன்னிலே நான்
கரைந்து காணமல்
போனது அந்த கணம்

கவனிக்கவும்
அனுபவிக்கவும்
இல்லாமல் போனது
உயிர் நாடி

பிரபஞ்ச முத்தரிப்பில்
காதல் கருத்தரிப்பு
இப்போது.

0 comments:

Post a Comment