அணைப்பின் பயணம்

Posted by G J Thamilselvi On Monday, 18 February 2013 2 comments

எதிர்பாரா அணைப்பில்
நெகிழ்தல் உணர்வின்
லயித்தல் பிறக்கிறது


காலங்கள் நீண்டபோதும்
சலித்துக்கொள்ளவில்லை
அணைப்பின் பயணத்தில்
இருவருமே

மறத்தல் நிகழ்கிறது
உன்னையும் என்னையுமா...?
நம்மையேவா...?
புரியா செயல் தன்னில்
தொடர்கிறது பாடம்

இத்தனை இறுக்கத்திலும்
வலிக்காமால் சுகிக்க
எங்கே கற்றது
உடலின் அணு துகள்கள்

மனதின் நிலை மாற்றத்தில்
மகரந்த சேர்க்கையின்
மந்தகாச புன்னகை

விலக மனமின்றி
விலக தவிக்கின்றது
புரிதல் உணர்வு
நமக்கான உந்தல் பகன்று.

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. விலகல் சாத்தியமன்று..

    ReplyDelete