காதல் அல்லாமல்

Posted by G J Thamilselvi On Thursday, 21 February 2013 0 comments

மீட்டெடுத்தலில்
உன் அக்கறை என் மீது
முழுவதுமாகிறது


கவலைகளில் என்னை
தாங்குவதான
உனது நடவடிக்கை

கண்டிப்பில் உன்னிடத்தில்
கனியும் அந்த
உணர்வின் பரிவு நிலை

பார்வை நோக்கலில்
விரிவாக்க என
என்னிடத்தில் உனதான நெகிழ்ச்சி
என்னை ஏற்றிவிட
ஏணியாகும் நிலையில்
நிற்பது உன் கவர்ச்சி

குரலின் ஓசையில்
கவி எழுதும்
இதய மீட்டலில்
எனதான முயற்சி

இதுவெல்லாம் காதல்
அல்லாமல் வேறேன்ன
நித்தம் உன்னை
காதலிக்கிறேன்

0 comments:

Post a Comment