முதல் அணைப்பு

Posted by G J Thamilselvi On Sunday, 3 February 2013 8 comments

என்னை கண்டதும்
தாவி அணைத்த
வேகத்தில் தான்
உன் காதலை உணர்த்தினாய்


என் தோளில் உன் முகம்
புதைந்த போது
துளிர்த்த கண்ணீர் துளிகளால்
முழுவதுமாக
என்னை ஆட்கொண்டாய்

உன் கரங்களின் பிடி
தந்த இறுக்கத்தில் தான்
உன் ஆழ்ந்த காதலை
பரிமாறினாய்

என் உடல் தீண்டிய
மூச்சுக்காற்றினாலேயே
இதமாக என்னை
வெப்பமூட்டினாய்

கரைதலும் களைதலும்
காதல் கலையாக
உருவாகித்தாய்
உயி்ர் பொருள் ஒன்றை
ஊற்றி உள்ளத்தை
நிறைவு செய்தாய்

8 comments:

 1. உருவாகித்தாய்
  உயி்ர் பொருள் ஒன்றை
  ஊற்றி உள்ளத்தை
  நிறைவு செய்தாய்///

  நல்ல வரிகள். தாய்மையின் ரகசியம் அருமை.

  ReplyDelete
 2. மனம் தொட்ட கவிதை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. நன்றி கவியாழி கண்ணதாசன் அய்யா மற்றும் ரமணி அய்யா அவர்களுக்கு.

  ReplyDelete
 4. அருமையாக இருக்கிறது கவிதைகளெல்லாம்.


  ராஜி

  ReplyDelete
 5. அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 6. கவிதை சிறக்க வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. என் தோளில் உன் முகம்
  புதைந்த போது
  துளிர்த்த கண்ணீர் துளிகளால்
  முழுவதுமாக
  என்னை ஆட்கொண்டாய்

  azhagaana varigal.

  ReplyDelete