இணைந்திறுக

Posted by G J Thamilselvi On Wednesday, 13 February 2013 0 comments

மனம் கலத்தல் பொருட்டே
கரம் கவிழ்ந்து கிடக்கிறது
எப்பொழுதும்


பாதுகாப்பின் உச்சமென
மிச்சம் இல்லாமல்
உறுதி சொல்கிறது
பிணைந்த கரங்கள்

உன்னவள் என்ற
உடன்படிக்கை உறுதியில்
சிணுங்கி கலைகிறது
விழிகள்

செல்ல தீண்டலாக
பார்வைகள்
உன் பாற் பட்டு
பதிவிடுகிறது
உச்சத்து உணர்வுகளை

உன் காலடியின்
இணைதலாக
என் பாதச் சுவடுகள்
துணைதல் பொருட்டாகவே
தொடர்கிறது நித்தமும்.

0 comments:

Post a Comment