முரண்படுகிறோம்

Posted by G J Thamilselvi On Tuesday, 19 February 2013 0 comments

உன்னை பற்றியதான
உரையாடல்கள் தான்
உள்ளத்தில்


மரங்களோடு என்
காதல் கிசு கிசுக்கப்படுகிறது
இரகசியமாக

என்னில் நீ இருப்பதை
ஒருவரும் அறியவில்லை
பைத்தியம் என்று
பகடி பேசுகிறார்கள்

மனிதர்களோடு என் பகிர்தல்
நின்று போனது
உணர்வுகள் ஒரு போதும்
புரிவதில்லை அவர்களுக்கு

வெகுண்டெழும் சூரியனும்
அக்னி தீ தருகிறான்
நம் காதல்
அணையாது பற்றி எழ

காமத்தை கொன்றுவிட்டும்
காதல் வரும் என்கிறேன்
காதலின் உச்சம்
காமம் என்கிறாய்

இது ஒன்றில் தான்
முரண்படுகிறோம்
இருவராக

0 comments:

Post a Comment