நினைவலைகள்

Posted by G J Thamilselvi On Saturday, 16 February 2013 0 comments

துரிதமாக புறப்பட்டது
என் எண்ண குதிரை
சிறகடித்து வானில்
அழகின் நிறங்களோடு
உன்னை சுமந்தபடி
உன்னிடத்தில்


நீண்ட கருவானில்
அலங்கரிக்கப்பட்ட
நட்சத்திர சாட்சி

நினைத்த மாத்திரத்தில்
உன் பிம்பத்தை
வடித்து விடுகிறது மனம்

எத்தனை யுகங்கள்
கடந்திருக்கும்
இந்த காதலின் தொடர் பயணம்

இங்கெல்லாம் இது
சுரப்பியின் லீலையாக
சுதி குறைக்கப்பட்டது

இந்த மனிதர்களுக்கு
தெரியவில்லை
காதல் இல்லை
என்றால் சுரப்பியும்
நீர்த்துபோகும் என்று.

0 comments:

Post a Comment