பாவனைகள்

Posted by G J Thamilselvi On Saturday, 23 February 2013 2 comments

பாவனைகள் மாற்றப்படுகிறது
உன் மாறுபடும் முகத்திற்காக
ரசித்து சிரிக்கிறேன்
சிலிர்த்து பார்க்கிறேன்
முறைத்து நகர்கிறேன்
நெகிழ்தலுடன் நெருக்கமாகிறேன்


பிரிந்து அழுகிறேன்
பிரியமுடன் சிலாகிக்கிறேன்
பித்தென பிதற்றுகிறேன்
பிழை என மறுகுகிறேன்

அன்பிற்கு தடை அமைத்து
தேக்குகிறேன் காதல் அணையாக
சிதறிகிடந்த நினைவுகள்
கோர்க்கப்படுகிறது
வந்துவிட்ட உன் பிரமாண்ட
எண்ணங்களின் தொடர் கொந்தளிப்பில்

சிக்கி தவிக்கிறேன்
சூழலுக்குள் இலை பற்றிய
சிற்றெறும்பாக

2 comments:

  1. சுழலுக்குள் இலை பற்றிய
    சிற்றெறும்பு -பாவம்தான் ..

    ReplyDelete