காத்திருப்பு

Posted by G J Thamilselvi On Saturday, 16 February 2013 3 comments

உனக்கான காத்திருப்பில்
ஏக்கத்தோடு
கரைந்து போகிறது உணர்வுகள்


நீ வந்து விட வேண்டுமென்று
தவித்து தகர்கிறது
நினைவுகள்

என் பார்வை
அந்த பாதையில் தான்
நீ வரபோகும் அந்த நொடிக்காக

என்னுடனான வாழ்க்கை பயணத்தில்
உன் பங்களிப்பில்
மட்டுமே வாழ்தலின் பகிர்வு

நோக்குதல் ஒன்றிலே
எனதான உயிர்
உனக்காக ஊற்றப்படுகிறது

உனை காணும் அந்த
கணம் ஒன்றில்
என் தேடுதல் முடிந்து
என் வாழ்வும்
முற்று பெறும்.

3 comments:

  1. Replies
    1. ஆமாம், ஆனா இந்த ஜென்மத்துல பார்க்க மாட்டேன்

      Delete
  2. பார்த்த விழிகள் பார்த்தபடி இருக்க..

    ReplyDelete