முத்தங்கள் கொடு

Posted by G J Thamilselvi On Thursday, 21 February 2013 0 comments

என்னையே பார்க்கிறாய்
வேறு பக்கம் திரும்பு என
உன் விழிகளை வேண்டுகிறேன்
உன்னை நோக்கவென


உன் ஒவ்வொரு பார்வையும்
இதழ் சுழிப்பும்
கவிதையாகிறது
விழிகளுக்குள் பதுங்கி

முத்தங்கள் கொடு
முத்திரை பதிப்பில்
மயங்கி போக ஆசிக்கிறேன்

முத்தங்கள் கொடுக்காமலும் போ
அதன் வலிதரும்
சுகந்தத்தையும் யாசிக்கிறேன்

இதழ்களை ஈரப்படுத்த
அவகாசம் கொடு என்றேன்
ஒத்திகையில் ஈரமாகும்
என்கிறாய் நீ

0 comments:

Post a Comment