எங்கே சென்றாய்...?

Posted by G J Thamilselvi On Wednesday, 20 February 2013 0 comments
உன்னை தேடிதேடி தேடிதேடி நான் தேய்ந்தேன்
என் தேடல் நின்ற போதும் நான் தோய்ந்தேன்


எங்கே சென்றாய் என்னை கொய்தே தின்றாய்
நெஞ்சோடு உன் பிம்பம் விட்டே சென்றாய்
ஓயாமலே உனை சுவாசித்தேன்
என் ஓங்கார ரீங்காரம் நீயே ஆனாய்
இந்த வலிகள் எல்லாம்
என்னை விட்டு ஓடும் என்றால்
அந்த கணங்கள் எந்தன் வாழ்வெல்லை
சிறு சிகரம் போலே
நெஞ்சுக்குள்ளே உறுதி வந்தால்
அந்த நொடிகள் காதல் நீர்திவளை

எங்கே சென்றாய் என்னை கொன்றே தந்தாய்
வலியோடு என் பிம்பம் வரைந்தே சென்றாய்
நினையாமலே எனை வாதித்தாய்
மன அணுதீண்டி தீயாக சுட்டே சென்றாய்
இந்த வாதை எல்லாம்
உன்னிடம் பேசும் என்றால்
அந்த தருணம் எந்தன் காதல் சொல்லும்
இந்த வாழ்க்கை போலே
மீண்டும் ஒரு வாழ்க்கை என்றால்
அந்த யுகத்தில் ஜீவ உயிர் உறையும்

0 comments:

Post a Comment