குறுஞ்செய்தி

Posted by G J Thamilselvi On Saturday, 16 February 2013 1 comments

என்னால் அனுப்பப்படுகிற
ஒவ்வொரு குறுஞ்செய்தியும்
என் கவனம் உன்மேல்
அதை உறுதிப்படுத்த தான்


பதில் வராதபோதும் கூட
நான் நினைப்பதுண்டு
என் நினைவு கரைதலில்
நீ குறுஞ்செய்தியை
பார்க்க மறந்தாய் என்று.

நீ என்னையும்
நான் உன்னையும்
நினைத்தல் மட்டுமே
காதலின் உயிரோட்டம் என்று
எண்ணவில்லை எப்போதும்.

உனக்கான வாழ்ந்தலில்
என் பங்களிப்பு
உன் பயணம் சுகப்படல்
நிலைக்காகவே

நம்பிக்கை ஒன்றில் தான்
காதலின் விதை
ஆழ பதியப்படுகிறது
விருட்சகமாக உரு மாற

1 comment:

  1. நம்பிக்கை ஒன்றில் தான்
    காதலின் விதை
    ஆழ பதியப்படுகிறது
    விருட்சகமாக உரு மாற // சிறப்பான வரிகள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete