காதலே தான்

Posted by G J Thamilselvi On Tuesday, 19 February 2013 1 comments

நான் சொல்ல வேண்டுமா...?
உன் மீதான காதலை
அதானால் நான் சாதலை.


இதயத்தில் குத்தும்
ஈட்டியின் வழிதலில்
குருதியில் கசிகிறது
நான் கொண்ட காதல்

அழுகையும் கூட
காதல் உச்சத்தின்
வழிதல் திரவம் தான்
கண்கள் வழி

ஏற்றலும் இல்லை
வெறுத்தலும் இல்லை
தவித்து நிற்பதில்
தர்க்கித்து பார்க்கிறது
காதல்

ஞான விசாரம் செய்ய
ஆயிரம் வழி உண்டே
உள்ளத்தை கீறி
கருத்து தேடல் ஏன்...?

காதலா இல்லையா...?
கேளவில் உண்டே பதிலும்கூட
காதல் தான் காதலே தான்
உன் மேல் நான் கொண்டது

1 comment:

  1. ம்ம் சரிதான்.. காதல் நிஜமாகும் புரிதல் உண்மை!

    ReplyDelete