எங்கே நான் தொலைந்து போனேன்...?

Posted by G J Thamilselvi On Monday, 18 February 2013 3 comments

பிணைபடுகிறேன்
பாச விலங்கினால்
இணையில்லா வழிகளில்
பயணப்படும் நாட்களிலும்
துணையாக வர
எவரும் இல்லை உறவுகளில்
துணை நான் என்று
வாய் மட்டுமே பேசும்
இணைகள் பல உண்டு
பாருக்குள்ளே


விழி நீர் துளிர்க்கும் போதும்
விழித்து நிற்பார் தள்ளியே
துடைத்து துன்பம் ஆற்ற
மனதின்றி நிற்பார்
முகம் மறைத்து செல்வார்
முகம் கண்ட பின்பும்
விழி வேறு திசை நோக்கும்
உதவிக்காக கரம் நீளுமோ என்று
பதறும் மனதின் பாசங்கு
முகத்தில் தெரித்து பதுங்கி சிரிக்கும்

வார்த்தைகள் முன் நிற்கும்
பாசங்கள் பரிகசிக்கும்
நேசங்கள் நெருக்கும்
எள்ளி நகையாடும்
வாழ்ந்த நாட்கள் மறக்கும்
வீழ்ந்தானே மூடன் மகன்
திட்டித்தீர்க்கும்
உதவி கரம் நீட்ட
மனதின்றி நடக்கும்

கண்டு விசாரித்துவிட்டால்
ஓ நண்பா கவனிக்கவில்லையடா
நெக்குறுக பேசும்
சொட்டும் வார்த்தைகளில் தேனும்
உள்ளத்து போர்வைக்குள் தேளும்
வசித்து பார்க்கும்

சுய நலத்திற்குள் சுருங்கி போனது உலகம்
அதில் வசிக்கும் உயிர்களிலும்
பொது நலத்தை விரும்பும்
உயிர் ஏதும் காணும்

முடங்கி போன உள்ளத்தில்
முற்போக்கு சிந்தை என்று
நீட்டி முழங்கி பேசினாலும்
செயல்பாடுகள் எங்கே...?
உன் ஆற்றல் மிகு
ஆக்கங்கள் எங்கே...?

துடித்து வேகிறேன் நான் தினம்
சுயநல சுரங்கத்தில் குதித்து
எழ வழி இன்றி தவிக்கிறேன்
எங்கே என் பாதை...?
தொலைந்து போனேன்...
எங்கே என் முகவரி...?
எங்கே என் துணிச்சல்
எல்லாம் இருந்தும்
எங்கே நான்
தொலைந்து போனேன்...?

3 comments:

 1. விழி நீர் துளிர்க்கும் போதும்
  விழித்து நிற்பார் தள்ளியே
  துடைத்து துன்பம் ஆற்ற
  மனதின்றி நிற்பார்
  முகம் மறைத்து செல்வார்//

  இப்படியும் மனிதர்களா?

  ReplyDelete
  Replies
  1. உலகத்தில் நன்மையும் உண்டு தீமையும் உண்டு ...............மனிதர்களில் பலசாரர் உண்டு அதில் இதுவும் ஒரு வகை அவ்வளவே

   Delete
 2. இழப்பதற்கு எதுவும் இல்லை நமது கையிலே.. வெல்வதற்கு உலகம் உண்டு நமது நெஞ்சிலே..

  ReplyDelete