முதல் முத்தம்

Posted by G J Thamilselvi On Wednesday, 13 February 2013 2 comments

எதிர்பாராத நிகழ்வு
விண்ணில் நிலா
உலா வர
அந்த இருளின் தனிமை
இல்லதிருந்திருந்தால்
உன் இதழ்கள் என்னை
தீண்டியிருக்காதோ என்னவோ...!


அந்த நடு சாம பொழுதில்
உள்ளமும் உடலும்
நடுங்கி வியர்த்தது
நான் சொல்லாமல்
நீ புரிந்து கூட
பிரியாமல் இணைந்ததில்
திக்கு முக்காடி தவித்தது
மூச்சுக் காற்று.

விடியலும் விலகலும்
ஒரு சேர நிகழ
நீ விலகாமல்
கலைந்தது உறக்கத்தில்
முத்த கனவு.

2 comments:

 1. கவிதை மிக அருமை.

  // அந்த இருளின் தனிமை
  இல்லதிருந்திருந்தால்
  உன் இதழ்கள் என்னை
  தீண்டியிருக்காதோ என்னவோ...///

  அதனால் கொடுக்கபட வேண்டிய மூத்தங்கள் வீணாக போய்விடக் கூடாது என்று தமிழகத்தின் அம்மா பவர் கட்டை சரி செய்யாமல் இருக்கிறார்களோ?

  ReplyDelete
 2. அய்யோடா..................ஏன்.....இந்த கொல வெறி...?

  ReplyDelete