ஏமாறுகிறேன் நான்

Posted by G J Thamilselvi On Saturday, 23 February 2013 2 comments

 

உன்னை நினைக்கும் போதெல்லாம்
நிசப்தம் ஆகிறேன் நான்

சப்தம் குறைந்து இரைச்சலற்று
போகிறது மன உரையாடல்கள்


கண்ணீர் ததும்புகிறது
நீ என் வாழ்வின் இறத்தல் அடையாளம்

என் உணர்வுகள் பகிரப்படாமல்
முடக்கப்பட்டதே

என் கனவுகளுக்கு இறக்கை
ஒடித்து இறகுகள் பிய்க்கப்பட்டதே

முக மூடிக்குள் ஒளிந்து
கண்ணாமூச்சு ஆடுகிறாய்

தொலைந்துவிட்டாய் என் வாழ்க்கையின்
மையச் சுற்றிலிந்து

ஆனாலும் மறக்கப்பட வில்லை
மறக்கப்பட்டதாக ஏமாறுகிறேன் நான்

2 comments:

  1. காலம் பதில் சொல்லலாம்.. கண்ணீரும் காயலாம்.

    ReplyDelete
  2. உணர்வுப்பூர்வமான கவிதை.. வலியை உணர்ந்தவர்கள் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்!

    ReplyDelete