நமக்கான ஊடல்

Posted by G J Thamilselvi On Sunday, 17 February 2013 1 comments

உன்னிடத்தில் குழந்தை
ஆவதுதான்
குறும்பின் இரகசியம்

நீ சுமந்து செல்வது
என் நினைவுகளில்
மகிழம்பூ மலர்களை

மகி்ழ்ந்தலில் நான்
உன் அருகாமை
நினைவுளையே
யாசிக்கிறேன்

காற்று சிறகடிக்கும்
திசையாவும்
நம் காதல் கலந்துருக
தவிக்கிறது

சுமையென்று பாராமல்
சுமப்பதில் தான்
ஆழந்த அன்பு
ஆட்சி செங்கோல்
ஆகிறது.

அளவுகோலால்
நிறுத்து பார்க்காமல்
காதல் மனதை
சுகித்து நோக்கவே
நமக்கான ஊடல்
தொடர்கிறது.

1 comment:

  1. அருமையான வரிகள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete