முதல் பரிசு

Posted by G J Thamilselvi On Saturday, 16 February 2013 3 comments

சிவந்த ரோஜாதான்
நீ தந்த
முதல் பரிசு

நீ தொட்டு தந்ததாலேயே
என் கூந்தல் ஏறாமல்
பத்திரப்பட்டது ரோஜா

உறங்காமல் பார்த்திருந்தேன்
கை தவழும் ரோஜா
என் இதய சாம்ராஜ்யத்தின்
ராஜா நீ ஆனாய்

எல்லைகள் அற்ற உற்சாகத்தில்
குதித்தெழுந்தது
தடைகளற்ற சிரிப்பு

மகிழ்ச்சி வெள்ளமென்று பெருகி
ரோஜாவை நனைத்தது
ஆனந்த கண்ணீர் துளி

அழுகை கரைதலில்
காதல் அலைந்தது
உனை தேடி 

என் உயிர் பேராற்றலில்
நீ சலனப்பாடாமல்
ஒரு போதும் இருக்க முடியாது

எனக்கு தெரியும்
என் காதலின்
அச்சாணி நீயே என்று.

3 comments:

  1. நல்ல கவிநடை .அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. சிறப்பான காதல் கவிதை! நன்றி!

    ReplyDelete