நான் ஒரு நாட்டிய மங்கை

Posted by G J Thamilselvi On Friday, 15 February 2013 3 comments

குளிரும் இரவில்
விரிந்தொளிரும் மைதானத்தின் நடுவில்
ஊஞ்சலொன்றில் அமர்ந்தபடி
நீரூபமாவின் நெற்றிமையத்தில்
பௌர்ணமி பொட்டு கண்டு
ஆஹா என்று ஆனந்தித்தேன்

பசுஞ்செடிகள் தலையசைத்து சிரிக்கிறது
காற்றின் கரங்கள் கிச்சு கிச்சு மூட்டுவதில்
உயர்ந்து நின்ற தென்னை ஆனந்த நடனத்தில்
நடராஜன் தோரணையில் குதியாட்டம் போடுகிறாள்

பாதங்கள் குதித்து நெம்பியதில்
அலைவின் தொலைவு கண்டது ஊஞ்சல்
ஆற்று மணற்பரப்பின் சில்லிப்பை உணர்ந்து
தரை பிரிந்தது பாதங்கள் 

ஊஞ்சலின் வேகத்தில் அந்தரத்தில் வீசப்பட்ட நான்
ஆற்றல் வீச்சில் சுழன்றாடும் முத்திரையோடு
எப்போது கைகோர்த்தாய் இணை நடனமாடவென
இணைந்து பிரிந்தும் அணைத்தும் தள்ளியும்.

காற்றெழுதும் தாளத்திற்கு இணங்க
பாட்டெழுதவென வந்தாய் என்றிருந்தேன்
புள்ளிகளாய் நின்ற நட்சத்திர கூட்டமைப்பில்
மையமாய் நின்றாட கடத்திக்கொண்டாய் என்னை

மேகங்கள் நகர்கிறது உடல் புகுந்து மீள்கிறது
நிறமற்ற பெருவெளியில் தொடர்ந்தொரு பயணவழி
நமை மறந்த உலகத்தில் விடிகிறது இரவு
விடியலை கண்ணுற்ற விரைந்தாட தொடர்கிறோம்
உன் பார்வை பயணவழி
நான் ஒரு நாட்டிய மங்கை

3 comments: