உன் நினைவுகள்

Posted by G J Thamilselvi On Saturday, 16 February 2013 1 comments

நிலா பொழுது
இரவொன்றின் தனிமையில்
குளிர் விரட்டும்
சுடு காற்று உன் நினைவுகள்

ஆடைகள் கலைக்கப்பட
அவசியம் இல்லாமல்
புரிதல் ஒன்றில்
காதலில் ஆழ்நதது
கவிதை மனம்

இசை அன்பில்
லயித்து நகர்கிறது
ஒவ்வொரு இரவும்

ரசனையுடன் இரவின்
வண்ணப் பூச்சில்
ஒவியங்கள் தீட்டுகிறது
காலம்

விரைந்து செல்லும்
தென்றலாய்
உன்னை தழுவிக்கொள்ள
தகர்கிறது
அச்சம்

மடமான பண்பில்
மட்டுப்பட்டு நிற்கிறது
அத்தனை பங்களிப்பும்

நாணத்தில் தலைகவிழ
உன் முகம் மறைந்த நொடியில்
என்னை பற்றியதான
திட்டல் தொடர்கிறது
எனக்குள்ளே.

1 comment:

  1. நிலா பொழுது
    இரவொன்றின் தனிமையில்
    குளிர் விரட்டும்
    சுடு காற்று உன் நினைவுகள்// வரிகள் அழகு! அருமை! நன்றி!

    ReplyDelete