முதல் கடிதம்

Posted by G J Thamilselvi On Wednesday, 13 February 2013 3 comments

நான் காதலிக்கிறேன்
என்று உறுதி செய்யப்பட்ட
பிறகு


உனக்காக எழுதப்படுகிற
காதலின் மடல்
இது

உன்னிடம் சொல்வதற்கு
துணிச்சல் இல்லாமல்
போகவில்லை

யுகத்தின் காலங்கள்
எனக்குள்ளாக இம்சித்துபோக
ஆசித்தேன்

அதனால் நான் காதல்
உறுதி செய்த பிறகு
உன்னிடம் சொல்வதற்கில்லை

உன் நினைவுகளை
மீண்டும்......தொடர் தியானமாக்கி
மீட்சியுறா உலகத்தில்
இன்ப துயில் புரிந்தேன்

மெனனகூட்டிற்குள்
எனக்காக மட்டுமே
உனக்காக எழுதப் படும்
மடல் வடிவிது.

ஒவ்வொரு எழுத்தும்
அரும்புகளில் மலர்களாக
குவிந்து விரிவதில்
எனக்கான உயிர்ப்பின்
நெகிழ்ச்சி விரிந்து போகிறது

உன்னருகில் இருந்து
உனக்கே மறைப்பது
சுகமான சிலிர்ப்பாக தான்
சிலிர்க்கிறது சுகம்

என் பேச்சின்
உரையாடல்களிலும்
என் காதல் தொனிக்காமல்
கவனப்படுகிறது மனம்

நான் சொல்லதான் போகிறேன்
என் காதலை உன்னிடம்
உயிர்பான ஒரு கணத்தில்

அன்று
நான் சொல்ல வேண்டியதில்லை
என் பார்வை பரிதவிப்பில்
இதழ்களின் துடிப்பில்
விழிகளின் கரைப்பில்
நீயாக உணர்ந்து அணைப்பாய்
நீங்கா சுடரொளியாக.

3 comments:

 1. நீண்ட காதல் கவிதை அருமை!

  ReplyDelete
 2. நன்று
  ஆசித்தேன் என்றால் என்ன?--ஆசி வழங்கினேன் என்று பொருளா?

  ReplyDelete
  Replies
  1. விரும்பினேன் அல்லது ஆசைப்பட்டேன் என்று பொருள்

   Delete