முதல் தீண்டல்

Posted by G J Thamilselvi On Wednesday, 13 February 2013 3 comments

உன் அருகாமையில்
உடல் ஆயிரம்
மலர்களாக மலர்ந்து
நின்றது


தென்றலினும் மென்மையாக
உன் தீண்டல்
எங்கோ பார்த்தபடி
உரசி சென்றாய் என்னை.

உன் பட்டுடல்
பட்ட இடத்தை
படாமல் தடவி பார்த்தேன்
தினம் ஒரு முறை

என்னுடல் ஆழ்கடல்
முத்தெடுக்க
ஆயத்தமாகி நின்றது
அன்றையதினமே
நான் பூவாக மலர்ந்ததைப்
போன்று.

3 comments:


  1. கவிதை மிக அருமை. இந்த கவிதையை படித்தபின் உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை அப்படி ஆகி இருந்தால் சில வருடங்கள் ஆகி இருக்கும் என கருதுகிறேன் அடுத்த 10 ஆணுடுகளுக்கு பின் நீங்கள் எப்படி கவிதை போடப் போகிறீர்கள் என்பதை தொடர்ந்து பார்க்கதான் போகிறேன்

    ReplyDelete
  2. நன்றி பத்து வருடங்கள் கடந்த பிறகும் நான் கவிதை எழுதுவேன் என்ற தங்களின் நம்பிக்கைக்கு.............உண்மையில் இது பதினைந்து வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டது. பதிவிட இப்பொழுது தான் நேரம் வாய்த்திருக்கிறது. பத்து வருடம் கழித்தும் இதே உணர்வு இருக்கும் கவிதைகளில்......

    ReplyDelete