முதல் பார்வை

Posted by G J Thamilselvi On Saturday, 2 February 2013 4 comments

விழிகள் தழுவிய சிலிர்ப்பின்
அந்த முதல் பார்வை
பெண் விழி பாவையில்
நிலைத்து போனது.


மின் சாரா தூண்டலாக
உடல் காந்தம்
ஈர்ப்பின் அலைகளை
வீசி என்பாற்
இழுத்து ருசிக்க ஆசித்தது.

எதிர் துருவங்கள் தான்
ஈர்க்குமாம் நீ
ஏனோ எப்போதும்
என் எதிர் திசையிலேயே
நி்ற்கிறாய்.

உன் கவனத்தை
என் பக்கம் ஈர்க்கவே
என் கால் கொலுசுகள்
சப்திக்கிறது.

திருட்டுத்தனங்கள்
வந்து ஒட்டிக்கொள்கிறது
உனை பார்க்கும்
ஒவ்வொரு பார்வையிலும்

4 comments:

  1. காதலை அழகாக சொல்லி ........ அசத்தி விட்டீர்கள் ...

    ReplyDelete
  2. நன்றி தேவன் மாயம்

    ReplyDelete
  3. அருமையான காதல் வரிகள்! அழகான கவிதை! நன்றி!

    ReplyDelete