சிந்தனை புதிது செய்

Posted by G J Thamilselvi On Tuesday, 15 January 2013 2 comments

புதிதாய் விடியுது வானம்,
எழிலாய் எழும்புது மேகம்,
குளிரால் சிலிர்த்திடும் தேகம்,
இசையால் அழைத்திடும் காகம்,
சிந்தனை புதிது செய்.

கனவில தோன்றிடும் காட்சி,
நிகழ்வில் வருவதே மாட்சி,
முயற்சி என்பதே சாட்சி,
எண்ணங்கள் புதிது செய்.


விடிந்திடும் விடியல்தோறும்,
சூரியன் எதற்கு காயும்,
கற்றிட சேதி தோன்றும்,
புத்தியை கூர்மை செய்.


சிந்தனை சிறகடிப்பில்,
வெற்றிவிதை பதியனிடு.
தோல்வியின் எண்ணத்தை,
தூக்கியே எறிந்துவிடு.


இதயத்தில் இருப்பதுவே,
வார்த்தையில் வழிந்து வரும்.
வார்த்தையில் ஒளிர்வதுவே,
சூழலை நிகழ்த்திவிடும்.


பார்வையின் நோக்கினிலே,
சம்பவம் நிகழ்ந்துவிடும்.
பார்வையில் நேர்த்தி செய்...!

வெற்றி அங்கே தவழ்ந்து வரும்.

எண்ணங்கள் எவ்வகையோ
மனித நீ அவ்வகையே
நல்லெண்ணத்தை மனதில் நிரப்பி
பிறப்பாய் நீ புது வகையே.

2 comments:

 1. Good! நல்ல பாஸிட்டிவான கருத்துக்கள்!

  ReplyDelete
 2. எண்ணங்கள் எவ்வகையோ
  மனித நீ அவ்வகையே
  நல்லெண்ணத்தை மனதில் நிரப்பி
  பிறப்பாய் நீ புது வகையே.

  azhagaana varigal. thodarungal. vaazththukkal.

  ReplyDelete