புரிதல் உண்டு என்றால்

Posted by G J Thamilselvi On Tuesday, 15 January 2013 3 comments

புரிதல் உண்டு என்றால்,
பிரிதல் அங்கு இல்லை.
பிரிந்தே போவதற்கு,
காதல் பொருளுமில்லை.


அது உயிர் சேரும்
அதுவாகும் இயல்பின் இரகசியம்.
உயிர் தாகம் தினம் ஏறும்,
பிரம்மன் இராஜ்ஜியம்.

படைப்பிற்குள் ஒளிர்ந்து மிளிரும்,
சின்ன சின்ன சலனங்கள்.
வண்ணத்தில் வண்ணம்போலே,
அன்பு மொழியின் வர்ணங்கள்.

தீண்டாத தீண்டல் எல்லாம்
சுகமான ராகங்கள்,
தீண்டிவிடும் தருணம் எல்லாம்
மழலை மன ஸ்பரிசங்கள்.

தோள் சேர நான் தானே,
தினம் ஏங்கினேன்.
நீ தலை கோத மடிமீது,
மழலையாகினேன்.

கதைகள் பேசி களைத்தபோதும்
விழிகள் மூட மறுத்த்தே,
விரல்கள் சோர்ந்த பின்பும்கூட
விடியல் கவிதை பேசுதே.

உன் விழி போதும்,
அது தீண்டும் உயிரின் உள்மனதை,
அது உண்டாக்கும் நெஞ்சோடு,
காதல் மன போதை.

புரிதல் உண்டு என்றால்,
பிரிதல் அங்கு இல்லை,
பிரிந்தே போவதற்கு,
காம்ம் வாழ்க்கை இல்லை.

அதை தாண்டும் மனம் தீண்டும்,
உயிரின் இரகசியம்.
ஒரு பார்வை ஒரு சிரிப்பில்,
தனித்தே வாழ்ந்துவிடும்.
நினைவையே துணையாக்கி
தனிமை தகர்த்துவிடும்.

3 comments:

  1. மிகவும் அற்புதம் , உங்கள் படைப்பிற்கு எனது பாராட்டுகள். உங்களிடம் இன்னும் அதிகமாக எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete