நிராகரித்தலின் வலிகள்

Posted by G J Thamilselvi On Monday, 7 January 2013 7 comments

நிராகரித்தலின் வலிகள் எங்கு துவங்குகிறது...? இந்த வாரத்தில் இரண்டு நபர்களிடம் நிராகரித்தல், நிராகரித்தலின் வலிகள் என்ற வார்த்தையை நான் கேட்டேன். நிராகரித்தல்இந்த வார்த்தை எங்கு துவங்குகிறது. இது வெறும் வார்த்தை என்றபோதில் அதற்கு என்ற உயிர்த்தன்மையும் வடிவும் இல்லாதததை போல் தோன்றியது. நிராகரித்தல் ஒரு செயலாகும் போது மனம் வலிகளை மிகுத்துகொள்கிறதோ என்று தோன்றியது.


நாம் அனைவருமே நிராகரித்தலின் வலிகளை கடந்தே வந்திருப்போம். ஒன்று நிராகரிப்போம், இல்லையென்றால் நிராகரிக்கப்படுவோம். இது நம் கவனம் இன்றியே கூட நடந்திருக்க கூடும்.

நிராகரிப்பை நாம் குழந்தை பருவத்திலேயே உணரத்துவங்கிவிடுகிறோம். பசிக்கு அழும் குழந்தையை தாய் அழவிட்டு பிறகு பால் புகட்டும் போது. தனித்து விடப்படுகிற குழந்தை தன் அழுகையினூடே நிராகரிப்பையும் உணர்கிறது. குழந்தை அம்மாவின் சேலை தலைப்பை பிடித்தபடி அம்மா அம்மா என்று அழைத்துக்கொண்டிருக்க, யாரோ ஒருவரிடம் சுவாராசியமாக பேசிக்கொண்டிருக்கும் தாயின் செயலில் குழந்தை நிராகரிப்பை உணர்கிறது.

குழந்தைகள் அதிகம் உள்ள வீட்டில் நிராகரிப்பதும், நிராகரிக்கப்படுவதும்  அன்றாட காட்சிகளாகிவிடுகிறது. ஒரு குழந்தை தன் கையில் இருக்கும் பொம்மையை பாதுகாக்க முறைப்பதும், மறுக்குழந்தை உதடுப்பிதுங்கி கண்கள் கசிய அழுகையினுடே தன் நிராகரிப்பின் வலியை கரைப்பதும் வாடிக்கைதான்.

நிராகரிப்பை வேறு எங்கு உணர்கிறோம்...? இப்படி சிந்தித்துக்கொண்டிருந்த வேளையில் தான் கசியும் மௌனம் வலைதளத்தில் மாதவிடாய்  ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி என்றொரு கட்டுரை படிக்கும் நேர்ந்தது. இதை எழுதியிருப்பவர் ஈரோடு கதிர். மாதவிடாய் குறித்தான இந்த கட்டுரையை படித்தபோது மாதவிடாய் நாட்களில் பெண்கள் நிராகரிப்பை உணர்கிறார்கள் என்று உணர்த்தியது. முட்டு வீடு என்றொரு தனி இடம் இல்லாதபோதிலும், தனி தட்டு, தனி படுக்கை, இதெல்லாம் இயல்பில் அமைந்துவிடுகிறது. இதுவும் நிராகரிப்பின் வலியை தூண்டுவதாகவே தோன்றியது எனக்கு. தொட கூடாது, தனித்திருக்க வேண்டும் என்பது நிராகரித்தலாக கொள்ளப்பட்டாலும் அதன் பின் நியாயமான காரணம் இருக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டேன். பெண்கள் அது போன்ற நாட்களில் இளைபாறுதல் வேண்டும். அதன் பொருட்டு அவர்கள் தனித்து விடப்பட்டிருக்கலாம். ஆதி மனிதன் வேட்டையாடியே உணவு பொருட்களை சேகரித்ததால். இரத்த வாசம் விலங்குகளை ஈர்க்கும் என்ற நோக்கத்தில் பெண்கள் தனித்து விடப்பட்டிருக்கலாம். அது கால போக்கில் சடங்காக மாறியது தான் கால கொடுமை.

நீங்கள் படிப்பதற்காக கசியும் மௌனம் ஈரோடு கதிர் அவர்களின் வலைப்பக்கத்தின் இணைப்பு கீழே,

ஒரு ஆணால் பெண்ணின் வலிகளை குறித்து எழுதப்பட்டிருக்கும், இந்த கட்டுரை ஆண் பெண் புரிதலுக்குண்டான ஆரோக்கிய கோணங்களை ஊர்ஜிதப்படுத்தியது. இது தொடர்ந்தால் ஒழிய பெண் வன்கொடுமைகள் அகற்றப்பட வாய்ப்பில்லை என்பது திண்ணம். நிகழும் பாலியல் குற்றங்களுக்கு மரணத்தண்டனை என்பது பெண்ணிடமிருந்து ஆணையும் ஆணிடமிருந்து பெண்ணையும் நிரந்தர பிரிவில் நிறுத்தும்.

ஒரு பெண் இல்லாமல் ஆணாலும், ஆண் இல்லாமல் பெண்ணாலும் வாழ்ந்துவிட முடியுமா என்றால் கேள்விகுறிதான்...உலகமே உடலுறவை மையமாககொண்டு இயங்கிக்கொண்டிருக்க, அதை பற்றி பேசுவதையே தவிர்கிறோம் என்பதும் அது தவறான செயலாக நம் சந்ததிக்கு ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கி தருகிறோம் என்பது விந்தையான செயல் தான் ஏன் அப்படி...? உங்களில் யாருக்கேனும் தெரிந்திருந்தால் பின்னூட்டங்கள் வாயிலாக ஆரோக்கியமாக விவாதிக்க வரலாம்.

எல்லா குற்றங்களும் நிராகரிப்பினாலே ஏற்படுகிறது. நிராகரிப்பற்ற, உணர்வுகளுக்கு வடிகாலான சமுதாயம் ஏன் உருவாக்கப்படவிலலை...? எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்துவிடவில்லையே ஏன்...? இவ்வண்ணம் கேள்விகள் நீள்கிறது.

நிராகரித்தலின் வலியை ஒரு பக்கத்தில் குறுங்கட்டுரையாய் படைக்க வந்த எனக்கு அதன் பாங்கு நீண்டுகோண்டே போகிறது. நீங்களும் சிந்தியுங்கள். நானும் எனக்குள் ஆழ்ந்து தேடல் பொருளோடு வருகிறேன் இக்கட்டுரையின் அடுத்த பாகத்தில்.

7 comments:

 1. நிராகரிப்பின் அர்த்தத்தை உணர வேண்டும் காரணம் தெரிந்து கொள்ள வேண்டும்

  ReplyDelete
 2. nalla pathivu. thaayidam kulanthai santhikkum niraagarippai patriya vaarththagal arumai.

  ReplyDelete
 3. எல்லோரையும்.. எல்லோரும் எல்லா நேரத்திலும் அங்கீகரிப்பதில்லை.. எல்லாருக்குமே நிராகரிப்பின் வலிகள் இருக்கத்தான் செய்யும்.. நல்லதொரு பதிவை துவங்கியிருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள்! தொடருங்கள்..

  ReplyDelete
  Replies
  1. நன்றி பாலா சார்

   Delete
 4. சரிதான் தோழி ...எல்லோருமே ஏதாவது ஒரு தருணத்தில் நிராகரத்தலை உணர்ந்திருப்போம்.இதற்குக் காரணம் எதிர்பார்ப்பு என்பது என் எண்ணம்... நம்மைப் போன்றே அடுத்தவர் சிநதிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லையே... அதேபோல் உடலுறவையும் தாண்டி ஆண், பெண் இணைந்து வாழ்தல் சமூக வாழ்வியலுக்கு இன்றியமையாததாகிறது தமிழரசி .

  ReplyDelete