தஞ்சம் கொடு...!

Posted by G J Thamilselvi On Wednesday, 16 January 2013 3 comments

என்ன இது...? என்ன இது...?
நெஞ்சம் தவிக்க,
கண்ணுக்குள்ளே,
தண்ணி வைத்து,
விம்மி அழுக.


நெஞ்சோடு தோன்றும் கவி என்றும்,
உண்மை இல்லையோ...?
எழுத்துக்கள் என்றும்,
மன வடிவை,
வரிப்பதில்லையோ...?

நடைமுறை படிப்பது எதுவோ...?
கவிக்குள்ளே கருவது எதுவோ...?
இரண்டுக்கும் இடையினிலே,
வாழ்வின் நிகழ்வதுவோ...?
துன்பம் இதுவோ...? 
தஞ்சம் எதுவோ...?

காதல் ஒரு காவியம் என்று,
கவிதை சொன்னது,
காதல் காமன் ஓவியம் என்று
வாழ்க்கை சொல்வது.

தாய்மை தரும் தெய்வீகம்
கவிதை சொல்வது,
தாய்மைக்கு கேள்வியை,
வாழ்வே தொடுக்குது.

இளமையின் உயிர் துள்ளும் வேகம்,
முதுமைக்கு வருவதில்லை.
முதுமையின் அனுபவ பாடம்,
இளமைக்கு தெரிவதில்லை.

இரண்டுக்கும் நடுவினில் நானோ,
சங்கதி புரியவில்லை...!
இதயத்தின் வலிகளை மிஞ்சும்,
ரணமாக்கும் மனகவலை.

கவலைகள் வீண் என்றறிந்தும்,
விலகவில்லை மனததில் என்றும்.
கலைந்து விட முயற்சிகள் கொண்டும்,
மடமையே மனதின் தஞ்சம்.

அறிவை கொடு. யாரிடம் கேட்க,
தேடலிலே ஞானம் பூக்க,
பெண்மையின் புரிதல் பார்வை
பண்புடன் பெருமை காக்க...!

என் துயர் தீக்க வா...!
புதிர் போக்க வா...!
என் அகப்பார்வையை விரிவாக்க வா...!
நிகழ்பார்வையில்...கூர்தீட்டவா...!

தஞ்சம் கொடு தலைவா,
உந்தன் துணிவான பார்வை வழி
துச்சமென கடந்துச் செல்ல
உள்ளத்தில் வீர வழி.


3 comments:

 1. சிறப்பான படைப்பு! நன்றி!

  ReplyDelete
 2. sirappaana vaarththaigal. arumai.

  ReplyDelete
 3. Hi there! This is my first visit to your blog!
  We are a group of volunteers and starting a
  new project in a community in the same niche. Your blog provided us useful information to work
  on. You have done a wonderful job!
  Also see my web site :: vakantiehuisje

  ReplyDelete