மெல்லச்சிரிக்கிறது முதுமை

Posted by G J Thamilselvi On Saturday, 5 January 2013 6 comments

இன்று நான் ரசித்தகவிதை முகநூல் நண்பரால் எழுதப்பட்டது. அவருடைய கவிதைகள் தலைப்புகள் ஏதுமின்றி முக நூலிலே பதியபடுகிறது. எப்போதவாது சில எழுத்து பிழைகளோடு, வந்து விடும் இவரது கவிதைகள் புது வார்த்தைகளை உருவாக்கி மெல்ல சிரிக்கும். இவர் இவரது கவிதைகளை அலைபேசியிலேயே தட்டச்சு செய்து பதிவிடுகிறார் என்று எண்ணுகிறேன். இது போல் பதிவர் திருவிழாவில் அலைபேசியின் மூலமாக வலைபதிவிடுவதாக அறிமுகப்படுத்திக்கொண்ட நினைவு. நினைவடுக்குளில் தேடியும் பெயர் நினைவிற்கு வரவில்லை. கணிணியில் தட்டச்சு செய்யும் பொழுதே எழுத்து பிழைகள் வந்து விடும்போது அலைபேசியில் பதிவிடும் இவரது முயறசியின் பரிசாக எழுத்து பிழைகளை மறந்து கவிதையின் உரயிர்ப்பை உணரத்தோன்றுகிறது.

உனது குறும்பு
உனது கோபம்
உனது அடம்
எல்லாமே எனக்கு
ஏற்புடையது தான்..

உன்
எச்சில் முத்தத்தால்
என்னை வழியனுப்புவாய்
உன் பிஞ்சி விரலசைவில்
பிரியாமல் பிரிவாய்..

உனக்கு
உடல் நோகும் போது
உறக்கம் மறக்கிறது
உயிர் வலிக்கிறது..

உதடு
பிதிக்கி நீ
கண்ணீர் சிந்தும் போது
பதற்றத்தில்
இந்த உடலே வெடிக்கிறது..

என் 
தேகச் சுவடுகள்
பதிந்து
என்னையே நான் பார்த்து
அதிசயக்க வைக்கிறாய் நீ..

உன்னைப் போலவே
உண்டதாக
உறங்கியதாக
லேசாக சாய்ந்து நிற்பதாக
அம்மா சொன்னபோது
நானும்
உன்னோடு குழந்தையாகிப்
போனேன்..

நீ
எனக்கு
ஞானகுரு
மனம் சலித்து
வெதும்பிக்கிடக்கும் போது
உன் அசட்டு
சிரிப்பொன்றில்
மொத்த தளர்வையும்
தளர்த்திடுவாய்..

சமயங்களில்
கண்டிப்பதும்
தண்டிப்பதுமாக
நீ குழந்தையென்பதும்
மறந்துபோகும்
சூழலின் நிமித்தம்
இந்த மனது..

அதுபோன்றத்
தருணங்களில்
சில நொடிகளிலேயே
என் மடிதாவி
மார்போடு புதைந்து கொள்வாய்..

நொந்து கொள்வதன்றி
வேறு வழியின்றி
உனக்கான
உச்சிமுத்தத்தில்
வழியும்
கண்ணீரில்
மௌனமாய் 
கரைந்து கொண்டிருப்பேன் நான்..

வாழ்தலின்
மென் சுகித்தலை
உன்னிடத்தில்
நானும்
என்னிடத்தில்
நீயுமாக
தேடித் தொலைந்து
மெல்ல நகர்கிறது
நமக்கான பொழுதுகள்..

ஏதுமற்றவனாய்
நிற்கிறேன் உனதன்பில் நான்
கௌரவமொன்றுமில்லை
யானைச் சவாரிக்கு
மண்டியிடவும்
வேண்டுமென்றே தோற்று
மன்னிப்பு கேட்கவும்
தயார்தான்..

நீ்
கேள்வி கேட்டுக் கொண்டே
இருக்கிறாய்
ஏதோ புரியாத மொழியில்
கதைச் சொல்லி சிரிக்கிறாய்..

உனது மொழியில்
உருவகப்படுத்துமனைத்தும்
அபத்தமெனினும்
அதனழகில்
ஆச்சர்யத்தில்
மூழ்கிக் கிடக்கிறேன் நான்..

எனக்கான
தேடல்
உன்னில் தொடங்குகிறது
அழகியலாய்
என்னை மீண்டும்
பிறக்கச் செய்கிறது
உன்னூடான 
இனிதான இருப்பு..

பிரிதல்கள்
சாத்தியப் படாமல்
கணங்கள் தோறும்
உன் நினைவுத் தடங்களைச்
சுமக்கிறேன் நான்..

நீ வேறாய்
நான் வேறாய்
அடையாளப் படுத்தமுடியா
தருணங்களில்
உனக்கான வாழ்தலின்
நிமித்தம்
கரையவே நினைக்கிறது
இந்த மனது..!!

ஒவ்வொரு தகப்பனின் உணர்வையும் பிரதிபலிப்பதான இந்த கவிதையிலும் எதுகை மோனையையும் யாப்பு அணி என்று இலக்கணத்தை தேடாமல் கவிஞனின் உணர்வை மட்டுமே கொண்டாடத்தோன்றியது. மறுகணம் நம் வயோதிகத்தை நிராகரித்தலின் வலிக்குள் தள்ளிக்கொண்டிருக்கும் இளைய சந்த்தியின் போக்கிற்காக மனம் மருகவும் செய்கிறது.

கவிதை சமைத்த ஏ.வி. சதீஷ்குமாருக்கு ஒரு பாராட்டை பகிர்ந்ததோடு பாரமாக கடந்தது மனம் தேடுதலேர்டு.

6 comments:

  1. அருமையான பதிவு வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  2. manathai negila vaiththa pathivu.padikkum pothey manam kanaththathu unmai. vaazhththukkal.

    ReplyDelete
  3. நல்லதொரு கவிதை! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete