புது உலகு படைப்போம்

Posted by G J Thamilselvi On Wednesday, 2 January 2013 4 comments

சிட்டு பறவைகளாய்
சிறகடிக்க
அழகியல் உள்ளங்களை
கண்டு ருசிக்க
அற்புத செயல்களை
மண்ணில் படைக்க
பிறந்தோம்

இன்றே உலகம்
எங்கள் கையில் பிறக்கும்
வெற்றி பதக்கம்
நெஞ்சில் வந்து அணைக்கும்
அன்பினை எங்கும் பரப்பி
நட்பின் உணர்வில்
வாழ்ந்திருப்போம்
கண்களில் கனவை தேக்கி
லட்சிய செயலில்
நிலைத்திருப்போம்
புரிதலுடன் நட்புகள் பிறக்க
புத்துலகை படைத்திடுவோம்
கற்புடன் காதல் சிறக்க
கண்ணிய துணைகளாய்
இணைந்திடுவோம்
பாரதி பாப்பா நாங்கள்
சட்டம் படைப்போம்
அச்சம் துறப்போம்
விழிகளை சீராய் நிமி்ர்த்தி
பார்வை விடுப்போம்
பாரை வகுப்போம்
வகுப்புகளை தடுப்புகளாக்கி
துணிவுடன் துடிப்பாய்
முன்னேறுவோம்
மதங்களை ஒன்றாய்
இணைத்து
அன்பு வழியை
ருசிக்க வைப்போம்
உலகினை அன்பில் நிரப்பி
இயற்கையின் எழிலில்
இசைந்திருப்போம்
புது உலகு படைத்திட இங்கு
மண்ணில் பிறந்தோம்.
அன்பில் இணைந்தோம்

4 comments:

 1. அருமையாகச் சொன்னீர்கள்
  நிச்சயம் புத்துலகு படைக்கத்தான்
  பூமிக்கே வந்திருக்கிறோம்
  மனம் கவர்ந்த நம்பிக்கையூட்டும்
  அருமையான பதிவிற்கு மனமார்ந்த நன்றி
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. அன்பு வழியை
  ருசிக்க வைப்போம்
  உலகினை அன்பில் நிரப்பி
  இயற்கையின் எழிலில்
  இசைந்திருப்போம்

  azhagaana kavithai. arumayaana varigal.

  ReplyDelete
 3. இன்னைக்கு இரண்டாம் திகதி..
  எல்ல ஸ்கூலும் ஸ்டார்ட்..
  பசங்களுக்காகவும் எடுத்துக் கொள்ளலாம் :)

  ReplyDelete