கனவொன்று கண்டேன்...!

Posted by G J Thamilselvi On Wednesday, 16 January 2013 1 comments

எண்ண விதை இன்று,
நெஞ்சில் விழுந்தாள்.
சிந்தனையில் தீ சுடர்,
பற்றி எரிந்தாள்.


கனவு கனன்று ஒளி பரப்பிட,
வெற்றி என் முன் மலர்ந்து நின்றாள்.
அன்பில் என்முன் உலகம் விரிய,
நட்பில் கலந்து எழிலில் நிறைய,
பண்பு அங்கே பரவி தெரிய,
வெகுண்டு எழுந்தாள் புவி மாதா.

கற்பின் அரசி அவள்,
பண்பில் பொறுமை மகள்,
வீரத்திருமகளாம் ஜான்சியின்
வம்சம் அவள்.

கருணையின் அன்னை.
அவள் ஈன்றெடுத்தாள்,
மடியில் பெண்ணை.
உலகினை வார்த்தெடுக்க,
தவழவிட்டாள் தாயை மண்ணில்.

பார்வையை வடித்தெடுத்தேன்,
என்முன்னே எழுந்து நின்றாள்.
அன்பின் பண்பை கொண்டு,
என் முன்னே புவி அன்னை.
சிந்தை வடிவெடுத்து,
தமிழால் பாடி நின்றேன்.

1 comment: