காதல் மழை

Posted by G J Thamilselvi On Tuesday, 15 January 2013 5 comments

சின்ன சின்னதாக
பல உயிரின் பொருள்கள் வேக
வேதி பொருளென
தீயில் புடமிட
காதல் கொண்டேனோ...?
நான்...
காதல் கொண்டேனோ
புவி தீயின் செந்தேனோ...?


காதல் ஒரு நிகழ்வோ என்று
தேடிச் சென்றேன்
நிகழவில்லை.
கண்கள் கண்ட காட்சிமட்டும்
காதலின் வேருமில்லை

ஹார்மோன்கள் லீலை என்று
ஒதுக்கிவிட தோன்றவில்லை
ஆளில்லா நாட்களிலும் அவன்
பிம்பம் மறையவில்லை

செவியை தீண்டும் அவன் வார்த்தை
உயிரின் கரு வரை 
சென்று சிலிர்ப்பது ஏன்...?
தொடுகை ஏதும் இன்றி
மனம் உணர்வுடன் அவனில்
கலப்பது ஏன்...?

மனமே மாயை என்றால்
காதலும் மாயையா...?
கலைந்து போகும் மேக்கூட்டம்
காதலின் லீலையா...?

என்ன செய்வேன் நானும் கூட
காதல் பாரம் தாங்கல
காதல் எனும் வார்த்தை பொருளே...!
நெஞ்சம் கண்டும் தூங்கல

அறிவு மயங்கும் வேளை
உணர்வுடன் விழிக்குது காதல் அலை
உலகை நனைத்து சிரிக்க
புது ஜனனமாய் இங்கு காதல் மழை.

5 comments:

 1. காதலும் மழை போல இறைவனின் அதிசயமோ?

  ReplyDelete
 2. காதலின்றி பிரபஞ்சத்தின் இயக்கமில்லை, ஆனாலும் காதல் புரிபடதா மறைபொருளாய் இருப்பதுதான் சமூகத்தின் விந்தை

  ReplyDelete
 3. நல்ல அர்த்தமுள்ள பதிவு
  மிக்க நன்றி.

  ReplyDelete
 4. arumayaana pathivu. vaaztrhthukkal.

  ReplyDelete