உயிருக்குள் தாய்மை புதை

Posted by G J Thamilselvi On Tuesday, 1 January 2013 4 comments

தங்க நகை இல்லமா
தங்கச்சி நீ அழகு
உன் புன்னகை சொல்லும்
செய்தி என்னடி
குவியும் சிரிப்பில்
கன்னம் தனி அழகு

கட்டளை இட்டு செல்ல
பழகிடடி
விழிகளின் தீரம் அழகு
பெண்மையின் வீரம் அழகு
கலைந்திட்ட குழல்கள் சொல்லும்
வறுமையும் தனி அழகு
புன்னகை பின்னோடு
பசி மறையும் பண்பழகு
கலைந்த உன் குழலோடு
காற்றிசைக்கும் இசை அழகு
அழகியல் புஷ்பசிலையே
அன்பினை பழகிடடி
விரல்களில் வீரம் பழகு
நகங்களும் துணை வரும் உனக்கு
கயவர்கள் கண்களை
பொசுக்க
சீறிடும் பாம்பாய் எழும்பு
உயிருக்குள் தாய்மை புதைத்து
கயவர்களை காலில் நசுக்கு.

4 comments:

 1. அழகான கவிதை...
  தங்கை இருக்கிற ஒவ்வொருவருக்கு பாசத்தை பகிர்ந்து கொள்வதில் சங்கடம் கிடையாது

  ReplyDelete
 2. கட்டளை இட்டு செல்ல
  பழகிடடி
  விழிகளின் தீரம் அழகு
  பெண்மையின் வீரம் அழகு

  வீரமான சிறப்புக்கவிதைக்குப் பாராட்டுக்கள்..

  இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

  ReplyDelete

 3. வணக்கம்!

  உணா்வும் உயிர்ப்பும் உடையகவி தந்தீா்!
  மனமும் மதியும் மலா்ந்து

  ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  கவிஞா் கி. பாரதிதாசன்
  பிரான்சு
  01.01.2013

  ReplyDelete

 4. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


  அன்புடன்
  மதுரைத்தமிழன்

  ReplyDelete