முத்தச்சுகவியல்

Posted by G J Thamilselvi On Tuesday, 1 January 2013 1 comments

முதல் முறை முத்தத்தில்
நான் லயித்தேன்
அந்த யுத்தத்தின் சுகத்தில்
நான் தொலைந்தேன்
உன் கை சேர்ந்ததும்
மெய் சேர்ந்ததும்
காதல் சித்தம் தானா...?
இதழ் ஓவியம்
கன்னம் கண்டது
காமன் சட்டம் தானா...?
வந்து என்னை கட்டிக்கொண்டாய்
நான் குழந்தையானேன்
தொட்டு வரிகள் விட்டுச்சென்றாய்
வெட்கப் புவானேன்
இது என்ன மாற்றமோ
பிரம்மன் தாக்கமோ
படைப்பின் கருவானேன்
காதல் காவியம் எழுதி வைத்திங்கு
நாயகி கண் சிவந்தேன்
பெண் நாயகி கண் சிவந்தேன்.

1 comment:

  1. நல்ல கவிதை
    தொடருங்கள்

    ReplyDelete