விடியலை நோக்கி.......!

Posted by G J Thamilselvi On Tuesday, 31 December 2013 5 comments

     ஒடுக்கப்பட்ட இனத்திற்கே உண்டான மூர்க்கம், இடுங்கி துளைக்கும் அவள் கண்களில் வழிந்தது. கரேல் என்று அண்டங்காக்கையின் கருப்பில் அவள் தேகம். சாராசரிக்கும் குள்ளமான, வினயம் பிடித்தவள் என்று பிறர் சாடும் ஒல்லி குச்சி உடம்புக்காரி. சுருண்டு அடர்ந்த கார்கூந்தல், தேங்காய் எண்ணெயின் வாசமே இல்லாமல் பரட்டையாகியிருந்தது. அவள் முகத்தில் பசியின் அடையாளம் சோர்வாய் படர்ந்திருந்தது. வறண்டிருந்த பூமியின் சுடு மண்ணுக்குள் பாதங்கள் புதைய வெம்மையின் தகிக்கும் தணல் பாதங்களை தாக்கியபோதும், பழக்கமோ அல்லது உரம் ஏறிய மனதின் திட்பமோ என்று உணரமுடியா வேகத்தோடு பாதங்களை மாற்றி அவள் இலக்கை நோக்கி நடைபயின்றாள். அவள் தலையின் சீமாட்டு துணிக்கு மேலாக விறகு சுமை. வலது கரம் சுமையை பற்றியிருக்க இடதுகரம் வீசி, இடை இருபுறமும் அசைய நடன மாதின் இடையசைவு நளினத்தை ஒத்தார் போன்றிருந்தது.
மேலும் வாசிக்க

மண்ணில் வந்த தேவ மைந்தன்

Posted by G J Thamilselvi On Tuesday, 24 December 2013 4 comments
அன்பு வழி தேவ மைந்தன் மண்ணில் வந்த மரி மைந்தன்
நெஞ்சில் வந்த இருள் நீக்க ஒளியாய் வந்துதித்தான்
மேலும் வாசிக்க

என் பால்யத்து சிநேகிதனே...!

Posted by G J Thamilselvi On Saturday, 2 November 2013 4 comments
அன்பென்னும் அடை மழையே
உள்ளத்தில் விழுந்தவனே
மனதெனும் கானகத்தின்
வழி ஒளியே…!
மேலும் வாசிக்க

 Inline image 1

என் வார்ப்பில், என் நெகிழ்வில், என் உணர்வுகளின் வசப்படுதல் அற்ற தருணங்களில் வந்த ஒவ்வொரு எழுத்தின் உயிர்ப்பலைகள் தொடுத்த மாலை தான் இது நிகழாதிருந்திருக்கலாம்.
மேலும் வாசிக்க

உன்னைத் தேடுகிறேன்...!

Posted by G J Thamilselvi On Wednesday, 9 October 2013 16 comments
குமிழ்ந்து தரை விழுந்த
நீர்க் குமிழி பாதையின் குறுக்காக
சர சர வெனக் கடந்த போது,
வேகச் சீற்றத்துடன் தலை குத்தி
வழிந்த போது,
மேலும் வாசிக்க

எதற்காக நான் வாழ்ந்திருக்கிறேன் ?

Posted by G J Thamilselvi On Sunday, 6 October 2013 4 comments

படித்ததில் பிடித்தது - ஜி.ஜே.தமிழ்ச்செல்வி


Bertrand Russell

(1872 — 1970)

எதற்காக நான் வாழ்ந்திருக்கிறேன் ?மூலம்: பெர்ட்ரெண்டு ரஸ்ஸல்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

சில புத்தகங்களை பற்றி கேள்விப்படும்போதே நமக்கு அப்புத்தகம் பிடித்து போய்விடும், அதை படிக்க ஆர்வமும் வளர்ந்துவிடும். இதற்கு முக்கிய காரணம் அப்புத்தகத்தை பற்றி நமக்கு கிடைத்த தகவலும் அத்தகவல் தரப்பட்ட விதமும்தான். அப்படி என்னை கவர்ந்த சில புத்தகங்களில் ‘What I have Lived For (Bertrand Russell)’ என்ற புத்தகமும் ஒன்று. இப்புத்தகத்தை நான் இன்னும் வாங்கவுமில்லை படிக்கவுமில்லை. ஆனால் இது எனக்கு மிகவும் பிடித்த புத்தகங்களின் பட்டியலில் இருக்கிறதென்றால் அதற்கு காரணம் திரு.ஜெயபாரதன் எழுதிய ஒரு கட்டுரைதான். அக்கட்டுரை உங்கள் பார்வைக்கும்.
மேலும் வாசிக்க

ஈரப்படட்டும் நம் காதல்

Posted by G J Thamilselvi On 2 comments


ஒரு நாள் தனி பொழுதில்
இதயத்தின் காதலை மலர்களாக ஏந்தி
உன்னை தேடி வந்தேன்

இருக்கிறாய் என்று சொன்னது காட்சி
இல்லாதிருந்தாய் நீ 
இருந்தும் பாராது போனாயே என்று
பரிதவித்து நின்றேன்

மலர்களோடு நேசத்தை
புதுப்பிக்க வந்த என்னை
காதல் மரணத்தின் வாசலில் தனித்து
விட்டு சென்றவனே

காதல் உயிர் ஊற்றி எனை
உணர்வு ஊட்ட வா
அன்பின் வெற்றிட வறட்சியில்
நீரூற்றாக ஈரப்படட்டும் நம் காதல்.
மேலும் வாசிக்க

பொய் சொல்லும் இதயம்

Posted by G J Thamilselvi On 2 comments

 

ஒருபோலி முகத்திற்குள்
கண்ணியமாக ஒளிந்துக்கொண்ட போது
எதிர்நிற்கும் உயிரானவனின் விழிகளுக்கு
முகமூடிக்குள் நட்பின் சிநேகிதி என்பது
தெரியாமலேயே போனது
மேலும் வாசிக்க

மயிலிறகு...!

Posted by G J Thamilselvi On 0 comments


பத்திரமாக வைத்துக்கொள்ள
மயில் இறகின் ஒரு இழை இருந்தது என்னிடத்தில்
நீளமான இழையை சரிபாதியாய் கிள்ளி
ஒன்றை என் சிநேகிதி கொடுத்தது 
மேலும் வாசிக்க

நாடகம் என்று

Posted by G J Thamilselvi On 0 comments
நிகழ்ந்துக்கொண்டிருக்கும் நாடகத்தில்
இறத்தல் காதாபாத்திரம் ஏற்றவர்கள்
கச்சிதமாக இறந்தார்கள்
மேலும் வாசிக்க

புத்தா ! என்னோடு வாசம் செய்.

Posted by G J Thamilselvi On Tuesday, 1 October 2013 2 comments
புத்தா…!
சில காலம் என்​​ ​
இதயக் கோவிலில்
வாசம் செய்
உன் மன அடையாளங்களைப்
பெறும் மட்டும்
மேலும் வாசிக்க

உள்ளத்து வாசம் செய்

Posted by G J Thamilselvi On 0 comments

அதீதம் இணைய இதழில் வெளியான எனது கவிதை.


உள்ளத்து வாசம் செய் 

மேலும் வாசிக்க

யார் நீ?

Posted by G J Thamilselvi On Sunday, 29 September 2013 4 comments


வானத்தின் கடையாந்திரத்திலும்
பூமியின் நிகழ் புள்ளி ஏதோ ஒன்றிலும்
நீ இருப்பாயானால் உன் முகம் காட்டு எனக்கு
இன்னமும் மிச்சமிருக்கிற நம்பிக்கைக்கு
ஒரு வேளை உயிர் வரக்கூடும் அப்போது
மேலும் வாசிக்க

யாரோ நடக்கிறார்கள்

Posted by G J Thamilselvi On 2 comments


காற்றில் யாரோ நடக்கிறார்கள்
கால்கள் முடக்கிக்கொண்டு
காற்றில் யாரோ சிரிக்கிறார்கள்
இதழ்கள் இறுக்கிக்கொண்டு
மேலும் வாசிக்க

வெற்றியின் விதை

Posted by G J Thamilselvi On Thursday, 26 September 2013 3 comments
வன்மத்தின் வாசலின் வார்த்தைகள் தொக்கி நிற்கிறது
யாரையேனும் குத்தி கிழித்தற் பொருட்டு
கீறல்களில் வழியும் இரத்தத்தை ருசிக்கவென
மாமிச பட்சிணிகள் வெறித்த பார்வையில் கவனத்தோடு
யாரேனும் தவறக்கூடும் தேள் கொடுக்கால் கொட்டி
உயிருக்கு ஒன்றுமில்லை கொஞ்சம் வலிதான்
சிரித்தபடி சொல்லி நகரலாம்
மேலும் வாசிக்க

அவள்

Posted by G J Thamilselvi On 1 comments
சிலரை பார்த்ததும் பிடித்துப்போகும்சிலரை ஏன் எதற்கு என்றே தெரியாமல் வெறுத்து போகும். அவளை பார்த்ததும் பிடித்து போனது. அழகான குமிழ் சிரிப்புகாதுகளில் எந்த காதணிகளும் இல்லை. கழுத்தில் மஞ்சல் சரடு. தூக்கி கோடு எடுக்காமல் வாரப்பட்ட தலை. கர்ப்பிணி பெண் நிறை மாதமாக இருக்க வேண்டும். உருண்டு திரண்டிருந்த வயிறு. பார்த்ததும் ஓடி போய் உதவ வேண்டும் என்றொரு உந்துதல். சோகத்தை மறைத்து தேடும் விழிகள். மிஞ்சி போனால் குத்து மதிப்பாக தோராயமாக எப்படி தெரிவு செய்தாலும் வயது 17 தாண்டாது.
மேலும் வாசிக்க

சிநேகிதி

Posted by G J Thamilselvi On Wednesday, 18 September 2013 4 comments
இன்று விடியாமல் இருந்திருக்காலம். இது என்ன வாழ்வின் எதார்த்தமான மகிழ்ச்சியை மணலில் போட்டு பிசைந்துண்பது போன்றதொரு உணர்வு. அவளை பார்க்காமலாவது இருந்திருக்கலாம். இரண்டும் நடக்கவில்லை, அவளை பார்த்துவிட்டேன். வட்டாட்சியர் அலுவலகத்தின் வாசலில், ஒல்லியாய் ஈர்க்குச்சி உடம்போடு, மூன்று பிள்ளைகளை கையில் அரவணைத்தும் ஒன்றை இடுப்பிலும் சுமந்தபடி...! நினைவடுக்குகளின் வாசலை கடந்து கிடுகிடுவென பின் ஒடுகிறது நினைவு. அவள்...நெற்றியை சுருக்கி நினைவுப்படுத்த முனைகிறேன். எப்படியும் பாத்து 20 வருடம் ஒடி போய் இருக்கும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிந்த பிறகு, பள்ளியில் நாங்கள் குழும்மாக நட்ட மரக்கன்றடியில் நின்று பிரியபோகிறோமே என்று அழுத ஞாபகம்.
மேலும் வாசிக்க

உணர்வுகளின் கிறுக்கல்கள்...!

Posted by G J Thamilselvi On Monday, 9 September 2013 3 comments


பசுவின் வருடலில் 
சுகித்து நிற்கிறது கன்று
லயித்து போகிறேன் நான்

***அப்பாவினிடத்தில்
அம்மாவை கண்டேன்
அவர் என் தலை வருடிய போது
மேலும் வாசிக்க

உணர்வுகளின் கிறுக்கல்கள் - !

Posted by G J Thamilselvi On 0 comments
ரோஜா மலரின்
 மென்மைக்குள் நீர்த்து 
போகிறது என் சுவாசம்

***

புல்லின் அசைவில் 
அழிந்து போகிறது 
புறவெளியின் அழுகுரல்கள்.
மேலும் வாசிக்க

நேசத்தின் ஆழ்கிணற்றில்...!

Posted by G J Thamilselvi On Friday, 6 September 2013 3 comments

கரு நிலா முற்றத்தில்
கரு மை பூசிய சாலையில்
ஒளி நிலவாய் அவன் நின்றான்
அண்டவெளி வீரன் அவன் 
மேலும் வாசிக்க

தாய்மை

Posted by G J Thamilselvi On 3 comments
தேசாந்திரியை போல, பாதசாரியை போல

வந்துவிடுகிறது அந்த மென் உணர்வு

அழையா விருதாளியாய் வந்து

அழிச்சாட்டியம் செய்யவென.

மேலும் வாசிக்க

வயிற்றெரிச்சல்

Posted by G J Thamilselvi On Sunday, 1 September 2013 2 comments
என் கண்ணு முன்னாடி நிக்காத வயத்தெரிச்சலா வருது ன்னான் அவன், ஏன்னு தான் புரியல மனசு கெடந்து அடிச்சுகிச்சு, எதுக்காக எம்மவ அப்படி சொன்னான்னு.

சின்ன கொலந்தையா இருக்க சொல்லோ, யம்மா யம்மான்னு அயுவான், நான் இல்லினா சோறு துன்னமாட்டான் இன்னா பண்றத்து சொல்லு.
மேலும் வாசிக்க

பத்திரமாய் இரு...!

Posted by G J Thamilselvi On Saturday, 31 August 2013 3 comments
வாழ்க்கை பயணத்தின் 
உச்ச வரம்புகளை ஒற்றை 
வார்த்தை நிர்ணயித்தது
பத்திரமாய் இரு 
நலம் விரும்பியாய்
பத்திரப்படுத்தப்பட்ட 
வார்த்தையின் நிமித்தமே
காயப்படுகிறேன்
மேலும் வாசிக்க

மிச்சம் என்ன இருக்கு...?

Posted by G J Thamilselvi On Wednesday, 28 August 2013 1 comments
இல்லை என்று சொன்னேன்
காதல் வரவில்லை என்று சொன்னேன்
வந்த நொடி உண்மையின்றி
கள்ளம் வைத்து மறைத்தேன் கள்ளச்சிறுக்கி
அந்த கள்ளத்திற்குள் நேசத்தை
ஒளித்து வைத்தேன் பாச கிறுக்கி
மேலும் வாசிக்க

மாமரக்குயிலே...!

Posted by G J Thamilselvi On Tuesday, 27 August 2013 3 comments
மாமரக்குயிலே மாமரக்குயிலே
உன் சோக கீதம் கேட்டு வந்தேன் மாமரக்குயிலே
அந்த ராகம் நெஞ்சில் உவர் நீர் கொடுத்தது மாமரக்குயிலே
மாமரக்குயிலே மாமரக்குயிலே
சோகம் என்னத்துக்கோ மனம் தாங்க வலி இல்லை
மேலும் வாசிக்க

சேதி சொல்லி வா...!

Posted by G J Thamilselvi On 1 comments
தேன் சிட்டு குருவியே ஒரு சேதி ஒண்ணு சொல்லவா
அவன் இல்லாம நான் தவிக்குறேனே அந்த கதை சொல்லவா
மேலும் வாசிக்க

கனவென்று அறியவில்லை...!

Posted by G J Thamilselvi On Sunday, 25 August 2013 2 comments
சொல்ல ஒரு சேதி உண்டு
உன்னிடம் மட்டும் சொல்வதற்கென்று
இனிமை இன்றி இளமை இன்றி
இரவில் வந்த கனவு ஒன்று
மேலும் வாசிக்க

எந்திரத்தனம்

Posted by G J Thamilselvi On Sunday, 18 August 2013 3 comments
இந்த வாழ்க்கையின் எந்திரதனத்தை எங்கே தொலைப்பது?

அது வந்து ஒட்டிக்கொள்கிற வேலம்பிசினை போல, வந்திருந்தவனை பார்த்தேன். பல நாள் எண்ணெய் காணாத தலை. மண்ணின் கைங்காரியத்தில் பழுப்பேறிய உடை. மலையை வாழிடமாக பெற்றவன்.
“என் வேலைய முடிச்சுடு உனக்கு சீதாபழம்கொண்டார்ரேன்“ என்றான் தலையை சொரிந்தபடி. இது எங்கூட்டு வேலைக்காரி…என்று நிழற்படம் நீட்டும் போதே 32 பல்லும் சிரித்தது. சொன்னபோதே அவனிடத்தில் வெளிப்பட்டது என்ன? என்று வினா எழுப்பிக்கொண்டேன் நான்.
மேலும் வாசிக்க

நமக்கு நாமே என்று...!

Posted by G J Thamilselvi On Friday, 16 August 2013 1 comments

கவிதைக்கு பொய் அழகாம்....பொய் கலக்கா காட்சியின் வடிவம் இங்கே எனக்கு தெரிந்த வரை அழகு படுத்தப்பட்ட வார்த்தைகளில் கண் கண்டதும் இதயத்தின் வலிகளை அறிவித்தபடி....................................................................கவிதைக்கும் படத்துக்கும் தொடர்பில்லைங்க இந்த கவிதைக்காக படம் தேடிய போது கிடைத்தது என்பதை தவிர.

கொட்டும் மழையின் சில்லிப்பு கூடத்தில்
கிட்டி கிடுகிடுக்கும் பற்களின் தாளத்தில்
நடுங்கி துணை தேடும் அணுக்களின் நடுக்கத்தில்
தனித்து நான் நின்ற வேளை

நீரோடும் சாலை கடந்து
நீர் தேடி பைய நடந்து
நனைந்தாடும் சேலை குடையாக
நீர் ஏந்தி சென்றாள் முதிர் அன்னை ஒருத்தி

எத்தனை ஈன்றாளோ
உடல் வலி பொறுத்து
பிள்ளையும் பெண்டுமாக
வாழை கன்றென நினைத்து

சின்ன குடில் ஒன்றில்
கடவுளென்று கல்பதித்த
கோயில் வீட்டில் தனித்து நின்றாள்
குருதி பால் கொடுத்த
உயிர்கொண்ட மாரியாத்தா

மழையோ தனிந்திருக்க
தனித்து நான் கடந்தபோது
இதயத்தில் உதயம் பெற்றேன்
எத்தனை பெற்றிடினும்
உற்றவர் சுற்றிடினும்
உற்றத்துணை நமக்கு நாமே என்று
மேலும் வாசிக்க

நேசித்தல் பொருட்டு

Posted by G J Thamilselvi On Thursday, 15 August 2013 2 comments
ஆழமான அன்பின் நிமித்தம்
உன்னோடு நானும் என்னோடு நீயும்
பேசாதிருக்க முடியாது என்று
பகிரங்கித்துக்கொண்ட நாளை
நினைந்து தவித்தேன்

இன்றோ நாளையோ
நீ பேசிவிடக்கூடும் என்று நானும்
அதையே எதிர்பார்ப்பாக்கி நீயும்
பேசாதிருக்க……………….
கனத்த மௌனத்தோடு
எண்ணங்களை அசைப்போட்டபடி
கடந்து போகிறது காலம்

தயக்கத்தை உடைத்து
இருவருமாய் எதிர்நிற்க கூடும்
அன்பின் நிமித்தம்
எந்த வரையறைகளும் இல்லாமல்

நேசித்தல் பொருட்டு.
மேலும் வாசிக்க

கைவிடப்பட்ட வியாபாரம் - Facebook - வாசிப்பனுபவம்

Posted by G J Thamilselvi On Friday, 9 August 2013 6 comments
" அப்பா ஏதாச்சும் வாங்கு வாப்பா "
தொலைக்காட்சியில் மூழ்கியிருந்த என்னை கைப்பிடித்து இழுத்தாள் மகள் .
என்னடா வாங்குறது ?
அங்க பாருங்க பொம்மை கடை வச்சிருக்கேன் என்றாள் .
இழுத்து சென்று காட்டினாள் தான் வைத்திருந்த பொம்மை கடைய .
மேலும் வாசிக்க
இன்று தேவதைக் கதை 
சொல்லச் சொன்னாள் 
தூங்கும் நேரத்தில் கடைக் குட்டி 
கண்கள் விரித்து சிறகு விரித்த 
தேவதைகளை உள்வாங்கிக் கொண்டே 
தாழிடப்பட்டிருந்த கதவை 
அடிக்கொருமுறை பார்த்து பின் 
கதையில் மூழ்கினாள் .

கதையின் போக்கிலேயே 
தேவதைகளுடன் உறங்கிப் போனாள் .

நேற்றிரவு அவளின் கனவில் 
பிரம்புடன் வந்திருந்தார் ஆசிரியை 
என்று மூத்தவள் சொல்லி தெரிந்தது . 

இன்று சிறகுகள் கொண்ட 
தேவதைகளுடன் 
சிறகுகள் கொண்ட தேவதையாக 
மிதந்து கொண்டிருக்கும் 
யாராவது ஒருவரின் கதை சொல்லலில் 
தேவதையாக கலந்திருப்பாள் . 

இன்று வரும் ஆசிரியை 
ஏமாற்றத்துடன் செல்ல வேண்டியது தான் 
தாழிடப்பட்டுள்ள அறைக்குள் 
அவளில்லாததைக் கண்டு ....

                                         எழுதியவர்: ராசு
                                         பல்லடம்


இந்த கவிதையை நான் எழுதவில்லை. வாசித்ததில் தொட்டு சென்றது ஒரு புள்ளியாக இதயத்தின் ஆழத்தை இது பேஸ்புக்கில் நண்பர் ராசு ராசு என்பவரால் பதிவிடப்பட்டிருந்தது. இதற்கு படமும் தலைப்பும் எங்கைங்காரியம். என் வாசிப்பனுபவத்தை அழியாமல் அடைகாக்கும் பொருட்டாக எழுத எண்ணியுள்ளேன். பேஸ்புககில் என் வாசிப்பனுபவங்களை பற்றி.
மேலும் வாசிக்க

ஒரு பார்வை தா...!!

Posted by G J Thamilselvi On 2 comments
சின்ன எதிர்பார்ப்பு தான்
இன்றாவது உன்னை
கண்டுவிட 
மேலும் வாசிக்க

நானும் அனாதை என்று...!

Posted by G J Thamilselvi On Thursday, 8 August 2013 3 comments
அன்பற்ற வக்கிர உடல்களின் ஒருங்கிணைப்பால்
உருவாக்கப்பட்டு தனித்துவிடப்படுகிறேன் நான்
உணர்ச்சி கொந்தளிப்பில் கொதித்து கலந்த பின்
என் உணர்வுகள் கசக்கியெறிப்படுகிறது அவர்களால்
மேலும் வாசிக்க

எங்கிருந்தாய் நீ...?

Posted by G J Thamilselvi On Tuesday, 6 August 2013 3 comments
கூடுவிட்டெழும்பும் வண்ணாத்தி போல
வீரிட்டெழும்பும் என் உணர்வே எங்கிருந்தாய்...?

அவன் கீறி சென்ற பின்பும் அன்பை ஊற்றி தர
காதல் ஆழத்தினை எங்கே கற்றாய்...?
மேலும் வாசிக்க

முத்தமிட்டு செல்

Posted by G J Thamilselvi On Monday, 5 August 2013 2 comments
காதல் என்னும் மாயாதேவிதான்
நம்மை பிணைத்திருக்கிறாள் இன்றுவரை
உணர்வு கரங்களால்
வடிவற்ற  உடல் பெருவெளியில்
மேலும் வாசிக்க

மௌனித்து சொல்கிறோம்

Posted by G J Thamilselvi On Sunday, 4 August 2013 3 comments
ஒரு சின்ன சிணுங்கலில்
வார்த்தைகள் ஏதுமற்று
தவித்து போகிறேன்
மீண்டும் உன்னிடமிருந்து
இசைவான செய்தி ஒன்று
வரும் வரையில்

கற்பனைகளை குத்தகை கொள்ளும்
மாயவன் நீ
அதன் கருவில் கனிவை குழைக்க
உன்னால் மட்டுமே முடியும்

உன் அருகாமை பொழுதுகள் அத்தனையும்
இளவேனிற் இம்சைகளை இனிக்க தருக்கிறது
கொஞ்சும் கருப்பட்டியும் கெஞ்சும் பனங்கற்கண்டுமாய்
இதய நாவின் ருசியாகிறது தினமும்

உன் விழி என் முகம் பார்க்க
என் இதயமோ விழியகப்படுத்துகிறது பத்திரமாய்
விழிகளற்று பார்க்கும் வித்தை
நமக்குள் நிகழ்வதை வியந்து
உணர்வுகளை இரகசியப்படுத்துறோம்

மௌனமாக பேச நம்மால் மட்டுமே முடியும் என்று
மௌனித்து சொல்கிறோம்
வார்த்தை மேகங்கள் அற்ற மனவெளியில்
இருவர் ஒருவராகி இல்லாமையில் மூழ்கும்
காலப் பொழுதுகளில்

மேலும் வாசிக்க

காற்றில் கரைந்து போவோம்

Posted by G J Thamilselvi On Friday, 2 August 2013 2 comments
பேசிய நாட்கள் நெஞ்சத்தில் விழுந்து
பேச சொல்லுதே
இது பேசா வரமதின் காலம் என்று
உணர்வுகள் கொல்லுதே
மேலும் வாசிக்க

என் உயிரானவரே...!

Posted by G J Thamilselvi On Thursday, 1 August 2013 1 comments
திடங்கொண்டு போராடு போட்டிக்காக என்னால் எழுதப்பட்ட இரண்டாவது காதல் கடிதம் இது. இதன் அளவு சிறியதாக இருப்பதால், இந்த கடித்த்தால் போட்டியில் பங்குபெற இயலவில்லை. போட்டியில் பங்கு பெற இயலாவிட்டாலும் இந்த கடிதம் உணர்வுகளின் குட்டி இளவரசி. மீண்டும் எழுத வரும் போது இந்த கடித்த்தை பதிவிடுவதாக நண்பர்களிடம் தெரிவித்திருந்தேன். மீண்டும் எழுதவென மீண்டு வந்துவிட்டதால் பதிவிடுகிறேன் இப்போது. 
மேலும் வாசிக்க

நான் கவிதை ஆனேன்

Posted by G J Thamilselvi On 4 comments
இதயத்தில் விழுந்த நினைவொன்றில்
நான் கவிதை ஆனேன்
மேலும் வாசிக்க

உள்முகம் திரும்பு

Posted by G J Thamilselvi On Saturday, 27 July 2013 8 comments
என்ன இது மாற்றம் எந்தன் உள்ளே
உள்ளம் அது தவிக்கிறது
வாழ்க்கை எந்தன் நெஞ்சுக்குள்ளே
கைகொட்டி சிரிக்கிறது
மேலும் வாசிக்க
என் உயிரானவரே...!

     எப்பொழுது வருவீர்கள், பயணித்த களைப்பு தீரும் முன்னே திரும்பிவிடுங்கள், கதவடைத்த சன்னல்களும், உட்புறம் தாழிட்ட கதவும், நீங்கள் இல்லை என்று பொய் சொல்லுகிறது என்னிடத்தில்.

     இதயத்தின் இரகசிய அறையில் ரம்மிய காதலுடன் தளும்பும் தங்களின் புன்னகை முகத்தை அவர்களிடம் காண்பிக்கவில்லை நான். விழிவிளிம்பில் வழியும் நீர் மேற்கூறையில் உங்கள் முக பிம்பம் கண்டு, மகிழ்ச்சியின் பன்னீர் மலர்களை மாலையாக்குகிறது இருபுறமும்.

     இறுக்கத்தில் இடைபுகுந்த காற்றின் இளஞ்சூட்டில், தங்களின் மூச்சுக்காற்றோ என்று மகிழ்ந்து திரும்புகிறேன் நான். அங்கு வெற்றிடம் கண்டு வெந்து போகிறது மனது. இடப்பட்ட நெற்றி முத்தம் ஒன்று நினைவில் அரும்ப மகிழ்ந்து பின் கூம்புகிறது இதயம்.

     வியர்வை மணக்கும் தங்களின் சட்டையை அணைத்தபடி வாயிற் பார்க்கிறேன் நான். எந்த நேரமும் நீங்கள் வந்துவிடக்கூடும். வெந்நீர் கொதித்து நீரூ புத்த்து. குதித்து நடம் புரிந்து வெறி ஏற்றுகிறது. அதன் ஏளனம் அடக்கவாவது வந்துவிடுங்கள் சீக்கிரம்.

     தட்டென்று வைக்கப்பட்ட பாத்திரத்தில் அடிப்பட்டு தரை, நோகிறதென்று முகம் திருப்புகிறது. காகம் கரைந்த்தில் கதவை திறந்து வைத்திருக்கிறேன் நான். என் இதய காவலனை வரவேற்கவென்று என் கூந்தல் மலர்கள் வாசற்கோலத்தில் தவங்கிடக்கிறது.

     மஞ்சள் முகம் தழுவி, குங்குமத்தில் சிரிக்கிறது என் காதல். விழிகள் மையிட்டு ஏக்கமும் நேசமுமாய் வசீகரிக்க தவிக்கிறது தங்களை.

     கொல்லை புற தென்றல், தங்கள் அருகாமை பொழுதை நினைவுட்ட வெட்கத்தில் கோலம் போடுகிறது கட்டைவிரல். கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சும் கண்ணீர், கொஞ்சம் ஏக்கம், கொன்று போடும் எதிர்பார்ப்புமாக நகருகிறது நாழிகை.

உங்களை பார்க்கும் அந்த நாழிகை என்ன செய்வேன். அழுவேனா? ஓடிவந்து அணைத்துக்கொள்வேனா? முகம் முழுவதும் முத்தங்கள் கொட்டி வெட்கம் துறப்பேனா? பிரிவு தந்த துயரில் அழுந்த பதித்த முத்தம் தங்களை வலிக்க செய்யுமோ...?
வேண்டாம் வேண்டாம் என் வருத்தங்கள் என்னுள் புதைந்து போகட்டும்.

என்னை பார்க்கும் அந்த நாள் நீங்கள் என்ன செய்வீர்கள். இறுக அணைத்துக்கொள்வீர்களா? விழிநீர் துடைத்து கருவிழிக்குள் முத்தம் வைப்பீர்களா? என் இதழ்களின் துடிப்படக்க, கருஞ்சிவப்பு அதரங்களால் போர்தொடுப்பீர்களா? அழுகையும், ஆரத்தழுவலும், இளஞ்சூடுவியர்வையும், காற்றிடைபுகா தழுவலுமாக, காதல் தவிப்பில் உயிர்க்குமா? அந்த நாழிகைகள்.

என் இளைப்பாறுதலுக்கு இதமாக உங்கள் நெஞ்சம் தயாராகுமா? உங்கள் விரல்கள் என் கூந்தல் கோதுமா? முத்தங்கள் வஞ்சனையில்லாமல் பரிமாறப்படுமா? என்னவளே என்று இதயம் அரற்றுமா? இதழ்கள் காதில் கிசுகிசுக்குமா? மீசையின் கிச்சுக்கிச்சு மூட்டுதலில், தேகம் சிலிர்த்தெழுமா?

இத்தனை வினாக்களுக்குள்ளும் நகராது நிற்கிறது நாழிகைகள். ஒவ்வொரு நொடியும் யுகமாய் நீள்கிறது. என் வேதனை பொறுக்காமல் நிலவு மேக முந்தாணையால் முகம் மறைத்து அழுகிறது. தழுவ வந்த காற்றும் தழுவாமல் கடந்து போகிறது. விண்மீன் கூட்டங்கள் கண்செய்கையால் தேற்றமுடியாமல் பரிதவிக்கிறது. அண்டசராசரங்களுக்கும் தெரிந்திருக்கிறது, என் உயிரான நீங்கள் இல்லாமல், தேகம் குலைந்து போகும் அணு அணுவாய் என்று.

என் அலங்காரங்கள் அழிந்து கலைந்த கூந்தலில் கவலை தொற்றகிறது. கண்ணீர் காய்ந்து தண்ணீர் அற்ற ஆறு போல் உப்புப்பாலங்களால் வெடித்துப்போகிறது கன்னம்.  எச்சில் வற்றி இதழ்களில் புன் நோகிறது. நான் வேதனை வெடித்து கதறும் முன் வந்துவிடுங்கள் என்னவரே.

                     என்றும் நேசமுடன்
                           மித்ரா
மேலும் வாசிக்க

திடங்கொண்டு போராடு - காதல் கடித பரிசு போட்டி

Posted by G J Thamilselvi On Friday, 12 July 2013 23 comments
முன் உரை அல்ல இது என் உரை

     நான் எழுதிக்கொண்டிருக்கும் ஒரு கதையின் இரு கதாபாத்திரங்களை உள்ளடக்கியது தான் இந்த கடிதம்.

     திடங்கொண்டு போராடு – வலைப்பக்கத்தில் காதல் கடித போட்டி அறிவிச்சு இருக்காங்க நீங்க கலந்துக்கங்கன்னு நண்பர்கள் சொன்னபோது, கடிதம் தானே ஒரு மணி நேரத்துல எழுதி ப்ளாக்ல போட்டுட்டு போய்ட்டே இருக்க வேண்டியது தான்னு நினைத்தேன். இந்த கடிதம் என்னை பயங்கர சுத்தல்ல விடும்னு நெனச்சுக் கூட பார்க்கல. வாழ்க்கையில சில விடயங்கள் வலிகளை தோற்றுவிக்க கூடியவை, அந்த வகையில் முக்கிய பங்கு வகிப்பது காதல் என்றால் என்னில் வலிகளை உணரச்செய்து கதாபாத்திரமாகவே மாறச்செய்தது இந்த கடிதம்.
மேலும் வாசிக்க

அருத்தியனே...!

Posted by G J Thamilselvi On Friday, 28 June 2013 4 comments
அருத்தியனே…! அருத்தியனே…!
என்னை அணைத்திட அணித்தாய் வா
அலகிலா அன்பைினை
என் இதயத்தில் ஊற்றிட வா
மேலும் வாசிக்க