தோற்பதிலும் சுகம் எனக்கு

Posted by G J Thamilselvi On Saturday, 29 December 2012 8 comments

சில விடயங்கள் நம்புவதற்கியலா வகையில் நடந்தேறுவது உண்டு. அப்படி நிகழ்ந்து போன சம்பவங்களை நான் அசைப்போடும் விதமாக தான் இந்த பதிவு. கணிணிக்கே நான் புதியவள். அதை உயிர்ப்பித்து அதில் தட்டச்சு செய்து சேமிப்பில் தேக்கிவைக்கவே கற்றிருந்தேன். அந்த வகையிலேயே என் கணிணி அறிவின் தரம். வேலைக்கு வந்த புதியது என்பதால் அவ்வளவாக யாரும் என்னை பணி செய்தே ஆகவேண்டும் என்று கட்டாயபடுத்தியதில்லை. வேலை நேரமே எனக்கு பயிற்சி நேரமாக அமைந்தது ஆச்சர்யம் தான்.


கடந்து பாதைகள் கனமான அனுபவங்களை கொண்டதாக இருக்கவே.........இணையம் எனக்கு அறிமுகமான புதியதில் சில பெயர்களை கூகுள் படங்களில் தேடிப்பார்ப்பது என்பது அருமையான பொழுது போக்கு எனக்கு. அப்படி நான் காலம் கடத்திய ஒரு நாள் பொழுதின் தலைப்புதோற்பதிலும் சுகம் எனக்கு இந்த வார்த்தைகளில் நான் தேடியபோது வெற்றிடம் http://tamilraja.wordpress.com என்ற வலைபக்கத்தை என் கண்கள் கண்டது. சில படைப்புகளை படிக்கும் போது அதனோடு என் வாழ்க்கையை ஒப்பிட்டு ரசிப்பதோ அல்லது துன்புறுவதோ நிகழ்தேறும். அழுகையும் புன்னகையும் உணர்வுகளின் வடிகால். அந்த நொடி என்கை சேரா வாழ்க்கைக்காக ரசித்து தேடி ருசித்த கவிதை அது.

உன்னை முத்தமிட எனக்கு

விருப்பமில்லை
என் காதலை சத்தமிடுவதிலும்
எனக்கு விருப்பமில்லை
தொடுதலுக்காக மட்டும்
காதலில்லை என்பதில் என் மனம்
என்றுமே விட்டுக்கொடுப்பதில்லை
மறதியை வெல்லும் ஆற்றல்
உன் நினைவுக்கு மட்டும் தானடி
உள்ளது
சொல்லாமலேயே நீ சொல்லி விட்டுப்
போன அத்தனை வார்த்தைகளும்
உன் மௌனத்திற்கு இன்றும் அர்த்தம்
சொல்லிக் கொண்டு தானிருக்கிறது
உன் கண்கள் மட்டும் ஏனோ
அதை மறுத்துக் கொண்டுதானிருக்கிறது
எது வரை என்பதில் தான் எனக்கும்
உனக்கும் நடக்கிறது ஒரு காதல் யுத்தம்
இதில் தோற்பதிலும் சுகம் இருக்கிறது
என்று நினைக்கிறது இங்கு ஓர் மனம்.


இந்த கவிதையில் கனிந்து இழையோடிய காதலலின் தாக்கம், படைப்பாளிகளின் வாழ்க்கை திரிபுதான் உணர்வுடன் உந்தப்பட்டு வார்த்தை வாய்க்கால்களாய் வழிந்தோடுகிறதோ என்று தோன்றியது.

2009 ஜனவரி 2 அன்று நான் பணியில் சேர்ந்தேன். 2009 ஏப்ரல் 20 தேதி அன்று நான் இந்த கவிதையை படித்திருக்கிறேன். என் பழைய டைரியின் கடைசிபக்கத்தில் குறிக்கப்பட்டிருந்த செய்தி என்னை வியப்பில் ஆழ்த்தியது. 2009ல் தமிழ்ராஜா என்பவரை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அதன் பிறகு இந்த வலைப்பக்கத்தின் மூலமாக கூட எங்களின் அறிமுகம் நிகழவில்லை. www.padugai.com ல் நான் எழுதிய என்றென்றும் உன்னோடு கதையின் மூலமாகதான் அறிமுகம். சம்பவங்கள் முன்குறிப்பிட்டு நடந்தைப்போல் இப்பொழுது எண்ணத்தோன்றுகிறது. என் எழுத்தாவலை இயற்கை ஊக்குவிக்கும் விதமாக தமிழ் ராஜாவை நட்பாக தந்ததோ என்று.

2012 – இல் இந்த கவிதையை எழுதிய தமிழ்ராஜா என்னுடைய நண்பர்.

விண்முகில் வலைபக்கமும் அவரால் உருவாக்கப்பட்டதே....எண்ணங்களுக்கு ஆற்றல் உண்டு என்பதை ஏனோ இன்று ஆணித்தரமாக மீண்டும் மீண்டும் உச்சரித்தது மனம்.

எதையோ செய்யத்துடித்த மனதின் எழுச்சி எழுத்தின் பயணத்தில் என் உணர்வுகளின் வடிகாலாக...........ஒவ்வொரு வருடமும் எதையும் செய்யாத என் வாழ்க்கையை வாழாது அய்யோ இதோ ஒரு வருடம் முடிந்துவிட்டது என்றதொரு ஏக்கம்.......

இந்த வருடத்தை எனக்காக நான் வாழ்ந்திருக்கிறேன் என்றொரு ஆழ்மன திருப்தி நிறைவு.

என் மனதில் எழுதப்படாது ஒதுக்கப்பட்ட வெள்ளைகாகித பக்கங்களில் தோல்வியின் சுகம் வெற்றியின் தடமாக மாறிக்கொண்டிருப்பதை அனுபவம் சொல்கிறது.


வருடத்தின் இறுதியும் புது வருடத்தின் ஆரம்பத்திற்காகவும் அனைவருக்கும்.................நட்புகலந்த வாழ்த்துக்கள்.

நண்பர்களுக்குள் நன்றி எதற்கு என்று நான் நினைப்பதுண்டு நெகிழ்ச்சி கலந்த இந்த தருணத்தில்........உலகம் முழுவதும் விரவி கிடக்கும் என் நண்பர்களுக்கு நன்றியை உரித்தாக்குகிறேன்.

எண்ணங்களுக்கு ஆற்றல் உண்டு
எண்ணுங்கள் நல்லவைகளை,
எண்ணுங்கள் அன்பின் பரிணாமங்களை,
எண்ணுங்கள் நன்மை தரும் செயல்களை
எண்ணுங்கள் வீரப்பெண்களின் பெருமைகளை
எண்ணுங்கள் ஆண்மையின் ஆளுகை பண்புகளை
எண்ணுங்கள் பசுமையான உணர்வுகளை
எண்ணுங்கள் இயற்கையுடன் இசைந்து செல்லும் வாழ்வை
எண்ணுங்கள் அன்புடன் பரிணமிக்கும் ஒரு புது உலகை
உங்கள் எண்ணங்களே பிரம்மாக்கள்.........உலகின் கருபொருள்கள்.


வாழ்க வளமுடன்

நன்றி என் தேடுதல் புரிதல் தந்து தேவையை நிறைவு செய்த இயற்கைக்கு
அப்பழுக்கற்ற நட்பின் பரிணாமங்களை அணு அணுவாய் ரசிக்கச்செய்து
வழி நடத்திய இயற்கைக்கு
புதிய புரிதலோடு புதிய பயணத்தின் வழிதுணையாய் வரும் இயற்கைக்கு

நன்றி நன்றி நன்றி நன்றி பலவாகுக

8 comments:

 1. எண்ணங்களுக்கு ஆற்றல் உண்டு
  எண்ணுங்கள் நல்லவைகளை,

  வாழ்த்துகள்..

  ReplyDelete
 2. உங்களின் தடுத்தாலும் இயற்கையும் சேர்ந்து உங்களுக்கு சுகமான வெற்றியை தரும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. மறதியை வெல்லும் ஆற்றல்
  உன் நினைவுக்கு மட்டும் தானடி
  உள்ளது
  /////////
  அழகான வரிகள்

  சில சந்தர்ப்பங்களில் எதேர்ச்சையாய் நடப்பதுவும் வாழ்வின் திருப்புமுனையாய் அமைவதுண்டு...
  இனீய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. :)..சொல்ல நினைத்ததைச் சொல்லி
  இருக்கின்றீர்கள் என்பது மட்டுமே புரிந்தது!

  ReplyDelete
 5. ஆச்சர்யம்தான்! அருமையான கவிதை! அழகான பகிர்வு!

  ReplyDelete
 6. உங்கள் நட்பு இன்று போல என்றும் வாழ்க!
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  http://thiruvarangaththilirunthu.blogspot.in/2012/12/blog-post_30.html

  ReplyDelete
 7. arumayaana pathivu. solla ninaiththa karuththai migasariyaaga velipaduththi irukkireergal. intha puththaandil ungal payanam vetri payanamaaga thodarattum. vaalththukkal.

  ReplyDelete
 8. விண்முகில் தமிழ்செல்வி அவர்களுக்கு,
  அருமையான பதிவு.
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  ReplyDelete