உணர்வே...உயிரே...

Posted by G J Thamilselvi On Wednesday, 26 December 2012 5 comments

என்ன இது மாற்றமோ
நெஞ்சுகுழி வேகுதே
தொண்டைகுழி நோகுதே
கன்னங்களில் நீர் வர
கண்கள் ரெண்டும் சாகுதே
ஏன் தானோ....


சுகமான பேச்சில்
சுகராகம் பாடி
இதமாக வருடிச்சென்றவனே
இதழோரம் இன்று
வெறுப்பமிலம் தந்து
அணுவாக கொன்று
செல்வது ஏன்
தொடாமல் அணைத்து
தொட்டுவிட தகர்த்து
கட்டில் சுகம் விடுத்து
கண்டதையும் ரசித்து
கருத்துகள் பகிர்ந்து
எழுத்துகள் உதிர்ந்து
இரவுகள் கடந்து
விடியலும் தொடர்ந்து
சுகித்திட்ட சுகங்களும்
போனது எங்கு...?

தாயாக தாங்கி என்னை
தோளோடு சேர்த்தவன்
சேயான பின்பு என்னை
கிழித்தெரிந்த மாயம் என்ன
அன்பு வண்ணங்கள் தீட்டி என்னை
வடிவமைத்து ரசித்தவன்
வண்ணங்கள் கொட்டிச்சென்ற
வன்மத்தின் சேதி என்ன...?
விடைகொடு தலைவா
உன் சந்தேக தீயனுக்கு
தடைவிடு தலைவா
பெண்கள் உன் போக
பொருளுமன்று
காதல் கொண்ட நெஞ்சுக்குள்
வேறு பிம்பம் தோன்றுமா...?
மோதல் கொண்ட பின்பும் கூட
ஊடல் என்று ஏங்குமா...?
பெண்ணவள் என்றும் தாயின்
வடிவத்தில் உருவந்த கடவுளினம்
உயிர்களை காக்கும் நேசம்
இயல்பினில் அவளது
பிறவி குணம்
உயிரோடு உயிர் சேர
உருவானதிங்கு காதல் மனம்
சந்தேகம் விட்டுவிடு...........
உணர்வே தழுவிச்செல்லு.

5 comments:

 1. பெண்ணவள் என்றும் தாயின்
  வடிவத்தில் உருவந்த கடவுளினம்
  உயிர்களை காக்கும் நேசம்
  இயல்பினில் அவளது
  பிறவி குணம்
  உயிரோடு உயிர் சேர
  உருவானதிங்கு காதல் மனம்
  சந்தேகம் விட்டுவிடு...........
  உணர்வே தழுவிச்செல்லு.


  ஆழமான சிந்தனை
  அருமையான கவிதை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. உயிரோடு உயிர் சேர
  உருவானதிங்கு காதல் மனம்//
  நல்ல வார்த்தைகளை உபயோகித்துலீர்கள் கவிதை அருமை பாராட்டுக்கள் ,தொடர்ந்து எழுதுங்கள்

  ReplyDelete
 3. அழகாக பாடல் போன்று இருக்கிறது
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. தாயாக தாங்கி என்னை
  தோளோடு சேர்த்தவன்
  சேயான பின்பு என்னை
  கிழித்தெரிந்த மாயம் என்ன
  அன்பு வண்ணங்கள் தீட்டி என்னை
  வடிவமைத்து ரசித்தவன்
  வண்ணங்கள் கொட்டிச்சென்ற
  வன்மத்தின் சேதி என்ன...?

  aazhamaana vaarththaigal. arumayaaga ullathu.

  ReplyDelete