இதய வலி

Posted by G J Thamilselvi On Sunday, 23 December 2012 4 comments


காற்றெழுதும் உந்தன் ஞாபகத்தை
யார் தடை செய்குவார்
தோற்றம் தரும் இந்த காதலையும்
யார் பிணை செய்குவார்
தொடரட்டும் உன்னோடு
நான் கொண்ட ஊடல்
இதழினில் எப்போதும்
காதலின் கூடல்
சுகமோ வலியோ
சுகித்துவிடு
சுகித்தால் போதும்
கடந்துவிடு
தடை செய்ய முடியாத
நினைவுகள் இன்று
உடல் தீண்டி கொல்கின்ற
மாயங்கள் உண்டு
இதழ்கள் சொல்லும் இல்லை என்று
விழிகள் கெஞ்சும் வேண்டும் என்று
முரண்பட்ட கூற்றிற்குள்
தடுமாறும் நெஞ்சம்
சுகப்படமுடியாமல்
உடல்களும் மிஞ்சும்
தொடரும் தினமும்
இந்த பிணி
என்றோ தீரும்
இதய வலி

4 comments:

 1. காதலின் அவஸ்தையைச் சொன்னவிதம்
  மிக மிக அருமை
  மனம் கவர்ந்த படைப்பு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. காதல் கொண்டால் கஷ்டப் படவும் கத்துக்க வேண்டுமாமே/
  நல்ல கவிதை

  ReplyDelete
 3. இதழ்கள் சொல்லும் இல்லை என்று
  விழிகள் கெஞ்சும் வேண்டும் என்று
  முரண்பட்ட கூற்றிற்குள்
  தடுமாறும் நெஞ்சம்

  vaarththaigalai miga azhagaaga thaernthu eduththu eluthi irukkireergal. vaalththukkal.

  ReplyDelete