உன்னை நோக்கியே நான்.......

Posted by G J Thamilselvi On Monday, 17 December 2012 5 comments

இதம் சேர்க்கும் உன் பார்வைகள் இல்லாமல்
பஞ்சடைந்து போனது இதயம்
வெறுமை வந்து குடிக்குகொண்டுவிட
அங்கு விரக்தியின் உதயம்
இதழ் ஒற்றி சுகித்த நினைவுகள் கடந்து
இதயம் ஒன்றிட ஏங்குகிறது மனம்
நாம் கடந்து வந்த நினைவுகளை
தனி ஒரு பொழுதில் அசைபோடு
நம் காதல் உணர்வின் மறைபொருள் புரிய
ஏதுவான தருணமாக இருக்கும் அது
பற்றுக்கோடற்ற பெருவெளியில்
இரு உடல்களை துறந்து
ஒருமைக்குள் கரைந்திட
தியானம் கைக்கூடி பிரபஞ்சவெருவெளி வசமாகும்
அந்த ஒரு நொடி பொழுதிற்கே
உன்னை நோக்கியே நான்.......

5 comments:

 1. எனக்கே நீ என்றான பின்னும் உனை நோக்கித்தான் நான் எப்பொழுதும்.. :)

  அழகான வரிகள் ரசித்தேன்

  ReplyDelete

 2. வணக்கம்!

  உன்னை நோக்கிக் கவிதையிலே
  உயா்ந்த தமிழின் எழில்மணக்கும்!
  பொன்னை நோக்கிப்! பூத்தாடும்
  பூவை நோக்கிச் சொல்நடக்கும்!
  என்னை நோக்கி இருவிழிகள்
  ஏங்கி அழைத்த நினைவுவரும்!
  முன்னை நோக்கிச் செல்வேனோ?
  மூளை முழுதும் உன்கவியே!

  ReplyDelete
 3. கவிதையும் படமும் நல்லா இருக்கு

  ReplyDelete
 4. வசன கவியாய் இருக்கின்றது!

  ReplyDelete
 5. இதம் சேர்க்கும் உன் பார்வைகள் இல்லாமல்
  பஞ்சடைந்து போனது இதயம்
  வெறுமை வந்து குடிக்குகொண்டுவிட
  அங்கு விரக்தியின் உதயம்

  azhagaana varigal.super.

  ReplyDelete