இதழியல்

Posted by G J Thamilselvi On Sunday, 16 December 2012 3 commentsஇரவின் மடியில்..
இதழின் பணியில்..
இவளின் பிடியில்
கண்ணுறங்க
கனவில் வருவேன்
காதல் தருவேன்
இதமாய் உறங்கு
இனியவனே
கண்களில் காந்தம் வைத்து
வார்த்தையில் என்னை
தின்பவனே

நெஞ்சுக்குள்குள் காதல்
வைத்து
சேவை செய்ய
மறந்தது ஏன்
உன் இதழ்சேவை
உடன் தேவை
முத்தம் ஒன்றை
வைத்துவிடு
இவள் துயர் தீர
சுகம் சேர
இதமாய் என்னை
அணைத்துவிடு
3 comments: