விடையை சொல்லிடடி

Posted by G J Thamilselvi On Sunday, 16 December 2012 3 comments
 
தொட தொட ஏக்கம்
இடையினில் தூக்கம்
கனவிலும் உன் தாக்கம்
இதழோடு பொய் சொல்ல
கற்றது எங்கே கண்மணி
உன் இமையோடு மை பேச
கெஞ்சுது மிஞ்சுது பெண்மணி
நீ குழந்தையா இல்லை குமரியா
உன் விழி சொல்லும்
செய்தியும் என்னடி
பருவமா அது பாசமா
அதில் வழிந்திடும் உணர்வுகள் என்னடி
தலைசாய்த்து தலை கோத சொல்கிறாய்
உன் விரல் தீண்ட தடைவிதித்து
கொல்கிறாய்
நெஞ்சத்தில் சாய்ந்திடும் போது
மலர் மஞ்சமாய் எனை கொண்டவளே
கன்னத்தை ஒற்றிட வந்தால்
விரல் சுட்டி தடுப்பது பெண்ணவளே
இதழ்சேர துடித்திட வைப்பதும் நீயே பெண்ணே
உனை தீண்ட பார்வையில் எரிப்பதும் நீயே கண்ணே
இதமான வலிகள் தந்து
கனிவாய் எனை பதப்படுத்து
இதழோரம் காதல் சொட்ட
கண்ணே என்னை முன்நிறுத்து
நீ குழந்தையா இல்லை குமரியா
சொல்லிச்செல்லடி பெண்ணே
இடை அசைவிலே நான்
தவிப்பதேன் விடையை சொல்லடி முன்னே
விடையை சொல்லடி முன்னே................
விடையை சொல்லிடடி

3 comments:

 1. தொட தொட ஏக்கம்
  இடையினில் தூக்கம்
  கனவிலும் உன் தாக்கம்
  ///////////
  அழகு

  ReplyDelete
 2. nalla varigal. azhagaana kavithai.

  ReplyDelete