எங்கே அவர்கள்

Posted by G J Thamilselvi On Saturday, 3 November 2012 7 comments
யுத்தம் செய்
வீறு கொண்டு முழங்கினேன்
திரும்பி பார்க்கிறேன்
ஒருவருமில்லை

உச்சத்தில் உச்சரித்த வார்த்தைகள்
தாழ்ந்து தவழ்ந்தது
யுத்தம் செய்
முனு முனுப்பானது
யுத்தம் செய்
உயிரில் கலந்தது
விதையாய் இறந்தது
எதற்காக எங்கே எப்படி
வினா பிறந்தது
ஒரே இருள்
இருளில் கலந்து விட்ட
மௌனம்
யுத்தம் செய்
திகைத்து நிற்கிறேன்
செய்வதறியாது
ஏற்றமையும் தாழ்மையும்
ஒரே உலகில்
அழகும் அழகின்மையும்
ஒரே பிரபஞ்சத்தில்
நன்மையும் தீமையும்
பட்டியல் நீள்கிறது
யுத்தம் செய்
உள்ளத்தில் உறைந்து போனது
அதற்கான நாளுக்காக
அதே உயிர்ப்பின்
ஒத்த எண்ணங்களின்
தேடுதல் துணைகளின்
தேடுதலோடு
எங்கே அவர்கள்
தீமையை எதிர்க்கும்
போராளிகள்

7 comments:

 1. [[முனு முனுப்பானது]]
  முணு முணுப்பானது

  [[ஏற்றமையும் தாழ்மையும்]]
  ஏற்றமும் தாழ்மையும்

  நீங்கள் சொல்ல முயற்சித்த கருத்து அருமையானது..

  கவிதை இன்னும் நன்றாக இருந்திருக்கலாம்.

  :)

  ReplyDelete
 2. மனம் தொட்ட அருமையான பதிவு
  போர்க்களத்தில் முன்னேறுபவர்கள் மட்டுமே
  திரும்பிப் பார்ப்பதில்லை
  திரும்பிப் பார்ப்பவர்கள் யாரும் முன்னேறிச் செல்வதில்லை
  சிந்திக்கத் தூண்டும் அருமையான பதிவு
  பகிர்வுக்கு நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. இறுதியில் கருத்து சமரசம் ஏற்பட்ட மாதிரி தோற்றம் தருகிறது..:)

  ReplyDelete
 4. கருத்து சமரசம் எப்போழுதும் ஏற்படுவதில்லை

  ReplyDelete