மனித இனம்

Posted by G J Thamilselvi On Saturday, 3 November 2012 5 comments
நிலம் நிலத்தில் நடந்து
கரையில் மிதந்து
காற்றில் கரைந்து
ஓய்ந்தும் போனது
சுழன்றெழுந்த நிலமடந்தையின்
கோபம் புரியவில்லை
மனிதனுக்கு
நிலத்தை கூறு போட்டு
ஈட்டியால் கிழிந்து
பங்கு போடும் வித்தையில்
மூழ்கியே போகிறான்
அவளின் வலி
வலியில் வெறி
கொஞ்சமாய் பொங்கும் போது
சேதங்கள் கொஞ்சம்
பிடரி சிலுப்பி
வெகுண்டெழும் நாளில்
மனித இனம்
மறைந்தே போகும்.

5 comments:

 1. உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,

  http://otti.makkalsanthai.com

  பயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,

  ReplyDelete
 2. நிலத்தினில் நீலம் செய்த திருவிளையாடல்கள்.....
  இறுதியாய் ஒன்றை உணர்த்தியிருக்கும்

  ReplyDelete
 3. மனிதன் உணர வேண்டும்...

  நன்றி...
  tm1

  ReplyDelete
 4. மனிதனின் அபரிமிதமான ஆசைகள்தான் இயற்கையின் கோபத்திற்கு காரணம்! உணர மறுப்பது ஏன்? நல்ல கவிதை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 5. அருமையான கவிதை

  ReplyDelete