குளிர்கிறது உயிர் வரை

Posted by G J Thamilselvi On Tuesday, 2 October 2012 12 comments


எலும்பை கொய்கிறது குளிர்,
சின்ன குத்தூசி பற்களால்,
அணுவின் துளைகளை நிரப்பி,
என் நடுக்கத்திற்குள் குளிர்காய்கிறது.
சூரை காற்றில் கிழிந்துபோன,
என் வீட்டு கூரையை ஒட்டுபோட,
எந்த தையற்காரனும் பிறக்கவில்லை
என் தாய் திரு மண்ணில்,
முடங்கிக்கொள்ள தீவாய்,
எங்கள் வீட்டில் எங்களுக்கொரு தாவு.
இருக்கும் பனாரத்தில்,
கொஞ்சம் கொஞ்சமாய் பங்கு போட,
எங்கள் பாதங்கள் மட்டும்,
பதுங்கிக்கொள்கிறது பனாரத்தின்,
ஓரத்தில்…!
பல சமயம் ஆத்தாளின்,
புடவையே பனாரத்தாகும்.
எங்கள் வெற்று உடலுக்கு.

12 comments:

 1. மனதை நெகிழ வைக்கும் வரிகள்...

  ReplyDelete
 2. ஐயோ கவிதை வாசிக்கும் போதே உள்ளத்தில் வலிக்கிறதே...

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஆளுக்கொரு பனாரத்தும்...கொஞ்சம் ஒட்டு போட ஓலையும் கொடுத்துவருவோம் நம் வலிகளை களைய

   Delete
 3. சூரை காற்றில் கிழிந்துபோன,
  என் வீட்டு கூரையை ஒட்டுபோட,
  எந்த தையற்காரனும் பிறக்கவில்லை
  வேதனை வரிகள்! "பனாரத்து" நான் கேள்விப்படாத சொல்! விளக்கம் தரமுடியுமா? அருமையான படைப்பு!

  ReplyDelete
  Replies
  1. பனாரத்து என்றால் போர்வை...தலித் மக்கள் பயன்படுத்தும் வழுவுச்சொல்

   Delete
 4. என் தாய் திரு மண்ணில்,
  முடங்கிக்கொள்ள தீவாய்,
  எங்கள் வீட்டில் எங்களுக்கொரு தாவு.
  இருக்கும் பனாரத்தில்,

  அழகான வார்த்தைகள். நெகிழ வைக்கும் வரிகள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. நன்று!

  "தாவு" இச்சொல்லின் பொருள் தெரியவில்லை.

  "பனாரத்து" என்பது வழுவியதாய் குறிபிட்டுள்ளீர்கள் ஏதிலிருந்து என்று கூறமுடியுமா?

  ReplyDelete
  Replies
  1. அரிஜன காலனி பகுதியில் வாழும் 9 வயது சிறுவன் ஒருவன் நட்பாகினான் அவன் பயன்படுத்திய வார்த்தைகள் தான் பனாரத்து, தாவு இவை இரண்டும் பனாரத்து என்பது பனாத்து என்று அந்த மக்கள் பயன்படுத்துவதாக தெரிந்தது..அது எதிலிருந்து வந்தது என்பதை நான் அறிந்திருக்கவில்லை தாவு என்பது இடம் என்ற பொருளிலேயே அவன் பயன்படுத்தினான் அதை எனக்கு தோன்றிய கவிதையில் நான் பயன்படுத்திக்கொண்டேன் அவ்வளவே

   Delete
 6. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_12.html) சென்று பார்க்கவும்...

  நன்றி...

  ReplyDelete
 7. அன்பின் தமிழ்செல்வி - கவிதை நன்று - யதார்த்தம் கவிதையாக மிளிர்கிறது - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

  ReplyDelete
 8. கம்ப்யூட்டர் காலம் என்றாலும்
  கிழிந்த குடிசைக்கும் கிழிந்த கந்தைக்கும்
  குறைவில்லா மண் நம் மண்!
  வலி கண்டது மனது...

  ReplyDelete
 9. “குளிர்,
  சின்ன குத்தூசி பற்களால்,அணுவின் துளைகளை நிரப்பி,
  என் நடுக்கத்திற்குள் குளிர்காய்கிறது.“

  குளிரே உங்களிடம் குளிர்காய்கிறதா? அருமையான வரிகள்.

  அதுசரி, பெரியாத்தா எந்த ஊர்?

  ReplyDelete