வியந்துதான் பார்க்கிறேன்

Posted by G J Thamilselvi On Friday, 19 October 2012 8 comments
இந்த மழைதுளி மண்ணில்பட்டு
விதைக்கு உயிர்தந்தது போல
என்னில் உன் நினைவுகள்
காதல் வித்திட்டது
உன் அருகாமைக்கான ஏக்கமும்
உன் குரல் ஆண்மைக்கான தேடலும்
மனக்கூட்டில் மையம் கொண்டு
மகரந்த மந்தகாசத்தை
அள்ளி தெளிக்கிறது
குளிர் தரும் இன்ப நினைவும்
குறுந்தளிர் போல நின்று
நம் நின்று பேசிய
அந்த மழைநாளை
மீண்டும் அப்பியாசிக்கிறது
நீ எங்கோ...?
நான் எங்கோ...?
பிரிந்துகிடக்க, என் மனம்
உன்னோடு இணையாடுவதை
எண்ணி வியந்து தான் பார்க்கிறேன்
இந்த காதல் மனதின் கற்பனைக்காக

8 comments:

 1. ரசிக்க வைக்கும் வரிகள்...

  /// மீண்டும் அப்பியாசிக்கிறது ///

  நன்றி...tm1

  ReplyDelete
 2. அழகான வரிகள்
  ரசித்தேன்

  ReplyDelete
 3. அருமையான காதல் உணர்வு... சகோ

  படித்தேன்//ரசித்தேன்....

  ReplyDelete
 4. நல்ல ரசனை.வாழ்த்துக்கள் சார்.

  ReplyDelete
 5. அருமையான கவிதை...உடல் பிரிந்து இருந்தாலும் மனங்களின் ஒன்றிணைப்பை வெளிப்படுத்தக்கூடியதாக

  ReplyDelete
 6. அழகான வரிகள்

  ReplyDelete
 7. Win Exciting and Cool Prizes Everyday @ www.2vin.com, Everyone can win by answering simple questions.Earn points for referring your friends and exchange your points for cool gifts.

  ReplyDelete