விழிப்புணர்வு

Posted by G J Thamilselvi On Wednesday, 17 October 2012 8 comments

வழிதெரியா இருளுக்குள் எரித்து
என்னை சாம்பலாக்க
எத்தனிக்கிறது உலகு
வகுக்கப்பட்ட சட்டங்களுக்குள்
வகுப்பில்லா அன்பு சஞ்சலப்படுகிறது.

சுயநலமும், அங்கீகாரமின்மையும்
குத்தீட்டியாய் குத்திப்பார்க்கிறது.
பணம் வீதியில் நின்று
பகடி பேசுகிறது.
அதிகாரம் ஆணவமாய்
ஆதிக்கம் செய்கிறது.
கரைவேட்டிக்கு பயந்து
எழுந்து நிற்கிறது
அரசு ஊழியம்
கொள்ளையர்களாய் ஆளுக்கொரு
தடியுடன் தட்டிவைக்க கிடைத்தான்
ஏதும் அறியா பாமரன்
தயக்கமும் கலக்கமுமாய்
நிற்கும் அவனுள்
இயல்பாகவே உற்பவிக்கிறேன்
நான் தான் விழிப்புணர்வு

8 comments:

 1. இப்படி முகிழ்க்கும் விழிப்புணர்வே
  சரியானதும் நிலையானதும் கூட
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. பணம் வீதியில் நின்று
  பகடி பேசுகிறது.
  அதிகாரம் ஆணவமாய்
  ஆதிக்கம் செய்கிறது.
  கரைவேட்டிக்கு பயந்து
  எழுந்து நிற்கிறது.
  விழிப்புணர்வு சிறப்புங்க.

  ReplyDelete
 3. விழிப்புணர்வு
  துாங்கிக் கொண்டிருப்பதை
  அழகாகச் சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள்.

  ReplyDelete
 4. அழகான வரிகளில் விழிப்புணர்வு

  ReplyDelete
 5. விழித்தெழ வேண்டிய விழிப்புணர்வு

  ReplyDelete