வெற்றி வசப்படும்...!

Posted by G J Thamilselvi On Tuesday, 16 October 2012 8 comments
ஒரு நிகழ்புள்ளிக்குள்,
உறைந்து உயிர்க்கிறது,
வெற்றியின் விதை.
முனைந்து செயல்படும்
ஆசையிலேயே,

பிரபஞ்சம் உயிராற்றலாய்,
இறப்பை தள்ளிபோடுகிறது.
ஆசையில்லாமல்,
பிரபஞ்ச இயக்கம் கடினம்தான்.
ஆசையில்லாமல்,
மானிட வாழ்க்கை சிரமம்தான்.
முனைந்து செயல்படு,
மீண்டும் மீண்டும்.
ஒவ்வொரு தோல்விக்குள்ளும்,
ஒளிந்து சிரிக்கிறது,
வெற்றியின் இரகசியம்.
ஒவ்வொரு செயலும் கற்றுதரும்,
புதிய பயணப் பாடம்.
மதத்தை தள்ளி, மனபலத்தை
தக்க வை.
ஆசைப்படு பிரபஞ்ச இயக்கதின்,
ஆற்றலோடு.
வெற்றி வசப்படும்,
உன் உள்ளங்கையில்...!

8 comments:

 1. அருமை
  இன்று முன்னுதாரணமாகப் பேசப்படுபவர்கள் எல்லாம் ஆயிரம் தோல்விகளைக் கண்டவர்கள்தான்

  ReplyDelete
 2. வெற்றியின் விதை.
  முனைந்து செயல்படும்
  ஆசையிலேயே,
  வெற்றி வசப்படும்...!

  அருமை!

  ReplyDelete
 3. அருமையான கவிதை அக்கா

  ReplyDelete
 4. கவிதை சிறப்பு... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 5. உற்சாகப்படுத்தும் கவிதை

  ReplyDelete
 6. ம்ம். நம்பிக்கையூட்டும் பதிவு..! வாழ்த்துக்கள்..!
  " மதத்தை தள்ளி, மனபலத்தை
  தக்க வை."
  இந்த வரிகள் பொறுத்தமற்றவையாக.. இவ்விடத்தில் தேவையற்றவையாக தோன்றுகிறது.
  இதனைத் தவிர்த்திருக்கலாம்..

  ReplyDelete