அன்பின் அன்புள்ள...!

Posted by G J Thamilselvi On Sunday, 14 October 2012 4 comments
தலைப்பை மட்டும் படித்து குழும்புவதற்காக அல்ல இப்பதிவு...நான் எழுதிய இரு கவிதைகளின் பதிவுகளுக்கு வந்த கருத்துரையில் தான் இப்படி ஒரு துவக்கம் இருந்தது. கடிதம் எழுதும் போது இது அதிகமாக பயன் படுத்தப்பட்டது எனக்கு நினைவிருக்கிறது. அன்பின், அன்புள்ள, அன்பான...இந்த ரக வார்த்தைகள். கடிதம் எழுதி 14 வருடங்கள் உருண்டோடி விட்டதால் மீண்டும் அந்த வார்த்தைகளை படித்தபோது உள்ளத்தில் ஒரு வித கிளர்ச்சி ஏற்பட்டது.

நன்றி ரஞ்சனி நாராயணன் அம்மா...!  வலைச்சரத்தில் விண்முகில் உலா வர வித்திட்ட தங்களின் எழுத்து விளையாட்டிற்காக...!

நன்றி சீனா...ம்ம்ம்ம்ம் ம்களிலே பேசியவர் வார்த்தைகளில் உரையாடியதில் மகிழ்ச்சியே ...தங்களுக்கும் எனக்கு கருத்துரையிடுகிற பதிவர் நண்பர்களுக்கும் நன்றி...! நன்றி...! நன்றி...!

படித்துவிட்டு எழுத்து சுவடுகளை விடாமல் செல்லும் வாசகர்களுக்கும் இதயம் கனிந்த மனம் மகிழ்ந்த நன்றி...!

திண்டுக்கல் தனபாலன் அய்யாவிற்கு தனிசிறப்புடன் கருத்துரை மன்னன் பட்டமளித்துமலர்களுடன் நன்றி...!


எழுதுகிற கடிதங்களை பல முறை படித்து பார்த்து அஞ்சலில் சேர்த்ததும்... எழுதப்பட்ட கடிதங்களை பத்திரமாக பாதுகாத்து, பல முறை படித்ததுமான உணர்வுகளை மீண்டும் அசைப்போட வைத்தது அன்பின், அன்புள்ள... என்ற வார்த்தைகள்.

தபால்கராருக்காக வரப்போகிற பதில் கடிதத்தை எண்ணி தவிப்போடு காத்திருந்த காலம் போய் சுருக்க முறையில் எனக்காக காத்திருந்த கடிதங்களை  (கருத்துரையில்) படிக்க தாமதித்த இந்த எந்திர வாழ்க்கையின் தன்மையை எண்ணி நகைப்பதா...?.........................? தெரியவி்ல்லை.

4 comments:

 1. மிக அருமையான பதிவு
  வணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
  உங்கள் வரவை விரும்புகிறது
  தினபதிவு திரட்டி

  ReplyDelete
 2. நல்ல பதிவு உண்மையில் திண்டுக்கள் தனபாலம் சார் கருத்திரையிடும் விடயத்தில் தாராள மனம் கொண்டவர்
  அவர் இடும் பின்னூட்டத்தின் மூலம்தான் புதியவர்கள் மேலும் உற்சாகமடைகிறார்கள்

  ReplyDelete
 3. மரியாதை, மகிழ்ச்சி, புதிய நண்பர்கள், பலரும்... ஏன் உலகமே நம் பக்கம் : ஒரே சொல் :

  நன்றி... நன்றி... நன்றி...

  ReplyDelete