இரவு கடந்த பின்னும்

Posted by G J Thamilselvi On Tuesday, 2 October 2012 8 comments

கொஞ்சமே கொஞ்சம் நாள்,
இணைய உலக சஞ்சாரத்தினின்று,
விலகி நடந்த பயன்,
குவிந்து விட்ட வலைமலர்களின்,
எழுத்தோவிய மாலைகள்,
படிக்க மாளாது தவித்து பார்க்கிறேன்...!
இரவு கடந்த பின்னும்,
இமை மூட மறுக்கிறேன்,
தொடர் பயணத்தில்,
தொட்டுவிட்ட பணியினை,
விட்டுவிட மனமில்லாது,
மூழ்கிபோனேன்,
நானும் அதுவானேன்.
மீண்டு வந்து பார்க்கின்றேன்,
ஒவ்வொன்றும் ஒரு தினுசாய்,
நிறத்திற்குள் கதம்பமாய்,
சிற்றிசையின் சிரிப்புமாய்,
சிதறி பார்க்கின்றன,
வகைக்கொன்றாய் பதிவுகள்.
எதை விட...? எதை தொட...?
எதை கடந்து செல்ல...?
எதில் மூழ்கி விட...?
இங்கு அத்தனை உள்ளங்களும்,
கொட்டிகிடக்கிறது.
எழுத்து பதியனில்,
எண்ணத்தின் உயிர் ரோஜாக்கள்.

8 comments:

 1. அழகான வரிகள்...

  அவ்வப்போது இப்படி வாங்க...

  ReplyDelete
  Replies
  1. நன்றிகளை நவில்கிறேன்

   Delete
 2. தொட்டுவிட்ட பணியினை,
  விட்டுவிட மனமில்லாது,
  மூழ்கிபோனேன்,
  நானும் அதுவானேன்.

  அருமையான வரிகள். அழகான கவிதை. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. அன்புள்ள தமிழ்செல்வி,


  உங்களின் பதிவுகளை இன்றைய வலைச்சரத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

  இணைப்பு இதோ:

  http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_12.html

  வருகை தருக, ப்ளீஸ்

  ReplyDelete
 4. அருமையான கவிதை வரிகள் .. :)))

  ReplyDelete
 5. அன்பின் தமிழ்செல்வி - கவிதை அருமை - நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete