இதயம் திறக்கிறதே

Posted by G J Thamilselvi On Saturday, 8 September 2012 12 comments


 
இதய கதவு உனக்கென,
திறக்கிறதே!
இதயம் முழுக்க உன்,
பெயர் இசைக்கிறதே!
கவிதை வடிவில்,
எனது காதல் வழிகிறதே!
காற்றில் ஏறி பறந்து வரவே,
தேகம் கடந்து உயிர்த்து வரவே,
இதய கதவு  உனக்கென,
திறக்கிறதே!
காதல் இது காதல்
என்று கற்று தரவா?
மோக முள் நெஞ்சை கீற
மருந்தாகவா?
விழிதேடும் பாவைக்கு,
தரிசனம் தரவா?
மொழி பேசும் கிள்ளைக்கு,
சுவை நாவாகவா?
பின்னோடு என் பாதை,
இணையாவதெப்போது?
முன்னோடு நீ சென்றால்,
பின்னலிலேலே பின்னலிடும்,
காளை இவன் மனது.
கொஞ்சம் என்னை,
திரும்பி பாரடி.
ஜென்ம சாபம் விலகி செல்ல,
பெண்ணே என் மனமும் துள்ள,
தரிசனம் கிடைக்காதா?
காளை இவன் மேல்,
கரிசனம் கிடையாதா?
முழு மதிமுகத்தை மறைத்தால்,
மன கொதிப்பை கொடுத்தால்,
காதல் கனிவன் இவன்
மனம் துடிக்கிறதே…12 comments:

 1. வரிகளில் காதல் விளையாடுகிறது... அருமை...

  ReplyDelete
  Replies
  1. நன்றி, காதல் விளையாடாத கவிதை உண்டா?

   Delete
 2. Replies
  1. இந்த ம் மிற்கு பொருள் என்ன பாராட்டா? கண்டனமா?

   Delete
 3. இதய கதவை திறந்து கவி பாடியமைக்கு வாழ்த்துக்கள்!

  இன்று என் தளத்தில்
  ஏன் என்ற கேள்வியும்! அதிசயத் தகவல்களும்
  http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_9.html
  நூறாவது பாலோவரும்! கொன்றைவானத் தம்பிரானும்!
  http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_6325.html


  ReplyDelete
 4. இதயம் கண்டிப்பாக இந்த கவிதை கேட்டு திறக்கும் தோழி... நல்ல படைப்பு

  என் வலைபதிவில் "ஒரு தாயின் பிராத்தனை".....

  ReplyDelete
 5. தங்களது கவிதை நல்லாத்தான் இருக்கு ஆனா எனக்குததான் வயசு இல்ல.
  மன்னிக்கவும்.
  வாழ்க வளமுடன்
  கொச்சின் தேவதாஸ்
  snrmani@rediffmail,com

  ReplyDelete
 6. இதயம் முழுக்க உன்,
  பெயர் இசைக்கிறதே!
  கவிதை வடிவில்,
  எனது காதல் வழிகிறதே!

  அழகான வரிகள். தங்களது கவிதை மிக நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.

  ReplyDelete