விடைபெறுவாயோ?

Posted by G J Thamilselvi On Thursday, 6 September 2012 8 commentsகாற்றில் வரும் கீதமே,
என் இதயத்தை தகர்ப்பாயோ?
தகர்த்தால் இதயவன் தவிப்பானோ?
அரும்பாக மனம் சுகிப்பானோ?
கன்னி இவள் கந்தர்வன் அவனே,

கல்மிஷம் செய்ய தயங்கிடுவானோ?
தடைசெய்ய வந்தேன் உன்னை,
அவன் துயர் நீக்கவே,
விடை பெறு கீதா பெண்ணே,
இசை மழை வேண்டாமே!
தனிமையில் என்னுள்,
துயில் கொள்ளும் அவனுக்கு,
சுகம் தற எண்ணி
பகை கொண்டேன் உன்னிடமே,
இசைப்பாயோவென்றால்
இசைத்துள்கொள்ளடி...
சப்திக்க்காமல்,
உன் வார்த்தை கொள்ளடி
மௌனமொழி பேசிடு எனக்காக
சைகை மொழியும் புரியுமடி
காற்றில் வரும் கீதமே
என் இதயத்தை தகர்க்காதே
தகர்த்தால் அவன் துயில்
களையுமன்றோ?
களைந்தால் என் மனம்
துடிக்கும்மன்றோ
வலி தருவாயோ நட்பிற்கு,
விடைபெறுவாயோ?
எனை பிரிந்து.

8 comments:

 1. நல்ல வரிகள்....

  இசையுடன் ஒரு பாட்டையே உருவாக்கலாம்... வாழ்த்துக்கள்... நன்றி...

  ReplyDelete
 2. காற்றில் வரும் கீதமே
  என் இதயத்தை தகர்க்காதே
  தகர்த்தால் அவன் துயில்
  களையுமன்றோ?//

  மனம் கவர்ந்த அருமையான கவிதை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. உன் வார்த்தை கொள்ளடி
  மௌனமொழி பேசிடு எனக்காக
  சைகை மொழியும் புரியுமடி
  காற்றில் வரும் கீதமே

  அருமையான வரிகள். சந்த நயம் கலந்து எழுதியுள்ளீர்கள். தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி தங்களின் பாராட்டுகளுக்கு

   Delete
 4. என் இதயத்தை தகர்க்காதே
  தகர்த்தால் அவன் துயில்
  களையுமன்றோ?
  களைந்தால் என் மனம்
  துடிக்கும்மன்றோ
  வலி தருவாயோ நட்பிற்கு,
  விடைபெறுவாயோ?
  எனை பிரிந்து.
  அழகான, ஆழமான வரிகள். தொடருங்கள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete